விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*  தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்*  தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க* 
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*  தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயனை - மாயச் செயல்களையுடையவனும்
மன்னு வடமதுரை மைந்தனை - (பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப்பெற்றுள்ள வடமதுரைக்குத் தலைவனும்,
தூய பெரு நீர் - பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தையுடைய
யமுனை துறைவனை - யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும்,
ஆயர் குலத்தினில் தோன்றும் - இடைக்குலத்தில் விளங்காநின்றுள்ள

விளக்க உரை

உரை:1

நோன்பு நோற்கும் பெண்களில் ஒருத்தி, ‘நாம் நோன்பு நோற்று எம்பெருமானை அநுபவிக்க இலையகலப் பாரியா நின்றோம்; இஃது அழகியவாறே; ‘ச்ரேயாம்ஸிபஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி” என்று மேலையார் செய்யும் நற்சிரிசைகட்கும் பல இடையூறுகள் மிடைதரமென்று நூல்கள் கூறும்; இராமபிரானை முடிசூட்டுதற்காகச் சம்பராந்தகனான தசரத சக்கரவர்த்தி பாரித்தான்; பிரமவிருடியான வசிட்டன் முஹூர்த்தமிட்டான்; ஸாக்ஷாத் தரும்மெனப்பட்ட இராமன் முடிசூட நின்றான்; பிராட்டியோடே கூடிப் பெரியபெருமாளைத் தொழுதிறைஞ்சினான்; நாடடங்கலும் இவ்வபிஷேக மங்களத்தைப் பிரார்த்தித்து மங்களாசாஸநம் செய்யாநின்றது; இங்ஙனம் அமைந்திடவும் அந்த மங்கள காரியத்திற்குமன்றோ இடையூறு மிடைதந்தது; நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க இன்று செய்யக்கருதிய நற்கிரிசை நன்னர் நிறைவேறுமோ?’ என்று கேட்க; நாம் பகவந்நாம ஸங்கீர்த்தநம் பண்ணவே பாவங்களனைத்தும் தீயிலிட்ட பஞ்சுபோல உருமாய்ந்தொழியுமாதலால் அத்திரு நாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணக்கடவையென்று அவளை நோக்கி மற்றொருத்தி உரைக்கும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

உரை:2

  "மாயனும் தெய்வத்தன்மை பொருந்திய வட மதுரையில் உதித்தவனும், சுத்தமான நீர் நிரம்பிய யமுனைக்கரையில் விளங்குபவனும், ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு போன்றவனும், தேவகியை பெருமைப்படுத்தியும், யசோதைக்கு சிறு மணிக்கயிற்றால் கட்டுண்ட வயிற்றைக் காட்டி சந்தோஷப்படுத்தியவனுமான கண்ணனை, உள்ளும் புறமும் பரிசுத்தமாய் வந்து, வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து, உடலால் வணங்கி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், முற்பிறவிப்பாவங்களும், அறியாமல் வருகின்ற பாவங்களும், நெருப்பில் விழுந்த பஞ்சு போல் அழிந்து போகும். எனவே, அவன் திருநாமங்களை சதா ஓதிக்கொண்டிருத்தல் வேண்டும்."

English Translation

If we come pure and strew fresh flowers, with songs on our lips and feeling in our hearts, and OFFERpraise with joined hands to our Lord Damodara, the prince of Northern Mathura who haunts the clean banks of the great river Yamuna, who was born as the light of the cowherd clan, and who was the jewel of his mother’s womb, then he will forgive our past misdeeds, and even what remains will disappear like cotton unto fire. So come, let us praise him!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்