விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்*  தவள நெடுங்கொடிபோல்* 
    சுடரொளியாய் நெஞ்சினுள்ளே*  தோன்றும்என்சோதிநம்பீ!*
    வடதடமும் வைகுந்தமும்*  மதிள்துவராபதியும்* 
    இடவகைகள் இகழ்ந்திட்டு*  என்பால் இடவகைகொண்டனையே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தடவரைவாய் - பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து வின்னும் - மிகவும் விளங்கா நின்றுள்ள
தவனம் நெடு கொடி போல் - பரிசுத்தமான பெரியதொரு கொடிபோல,
சுடர் ஒளி ஆய் - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே - எனது ஹ்ருதயத்தினுள்

விளக்க உரை

பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல, என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில். மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்- *** மென்ற வடசொல் திரிபு. இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்யாத்மஸ்வரூபம், திவ்யமங்கள விக்ரஹம், திவ்யகல்யாண குணம் எனப் பொருள்வாசிகாண்க. மூன்றாமடியில், வடதடமென்பதை, வட***மென்னும் வடசொல்லின் விகாராமகக்கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்; தனம் = தடம்; ***- துவராவதி- ***- இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல் என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப்பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே! இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக்கூட்டி உயர்யஸிக்க. “உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட இவரையெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார். “அதனிற் பெரிய வெள்ளை” என்று நம்மாழ்வாருக்குப் பகவத்விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம், இப்பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத்திருமொழி” என்ற ஆற்றோருரையி லருளிச்செயல் இங்கு அறியற்பாலது.

English Translation

Like a bright spotless flag fluttering gaily on a mountain-top, my radiant Lord, you appear as a flame flickering brightly in my heart. Casting aside the northerly milk Ocean, the high Vaikunta, the walled city of Dvaraka and many such places of abode, you have chosen to live in me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்