விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பனிக்கடலில் பள்ளிகோளைப்*  பழகவிட்டு ஓடிவந்துஎன்- 
    மனக்கடலில் வாழவல்ல*  மாயமணாளநம்பீ!*
    தனிக்கடலே!  தனிச்சுடரே!*  தனியுலகே என்றென்று* 
    உனக்கிடமாய்யிருக்க*  என்னை உனக்கு உரித்தாக்கினையே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடலில் - திருப்பாற்கடலில்
பள்ளிகோளை - பள்ளிக்கொன்னாதலை
பழகவிட்டு - பழகியதாக விட்டு (மறந்துவிட்டு)
ஓடிவந்து - (அங்கு நின்றும்) ஓடிவந்து
மனம் கடலில் - ஹ்ருதயமாகிற கடலில்

விளக்க உரை

எம்பெருமான், தன்னை அநுபவிக்குமவர்களான நித்தியஸூரிகளை உபேக்ஷித்துவிட்டு, என்னிடத்து அன்புபூண்டு, என்னையே போந்தாலாகக் கொணாவந்தான் என்றார், கீழ்ப்பாட்டில்; இப்பாட்டில், அவ்வெம்பெருமான் தன்னுடைய போக (***) ஸ்தாநங்களையும் உபேக்ஷித்துவிட்டு வந்து என் நெஞ்சையே தனக்கு உரிய இடமாக அங்கீகரித்தருளினாலென்கிறார். (வரதராஜபஞ்சாசத்) என்ற தூப்புற்பிள்ளையி னருளிச் செயல், இப்பாசுரத்தை ஒரு புடை அடியொற்றிய தென்றுணர்க. “பள்ளி கோள்“ என்றவிடத்து, கோள் – முதனிலைதிரிந்த தொழிற்பெயர். பழகவிட்டு-பழகும்படிவிட்டு, அதாவது – ‘எம்பெருமானுக்குப் பனிக்கடலில் பள்ளி கொள்ளுதல் எப்போதோ பழைய காலத்தில் இருந்த சங்கதி‘ என்னும்படியாகவிட்டு என்றபடி, பழகுதல் – பிராசீநமாதல். மனத்தைக் கடலாகக் கூறியது – குளிர்ச்சி. இடமுடைமை முதலிய தன்மைகளின் ஒற்றுமைபற்றி. “***“ என்பதனால், எம்பெருமான் ஸூர்யமண்டலத்தை இருப்பிடமாக்க் கொண்டவனென்பது அறியற்பாற்று.

English Translation

O bridegroom-Lord! You gave up reclining in the ocean of Milk, and came running to take abode in the ocean of my heart. When many excellent resorts like the grand Ocean, the radiant Sun and the exalted heaven await you. You choose to come and live in me, what a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்