விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சங்கின் வலம்புரியும்*  சேவடிக் கிண்கிணியும்* 
  அங்கைச் சரிவளையும்*  நாணும் அரைத்தொடரும்*
  அங்கண் விசும்பில்*  அமரர்கள் போத்தந்தார்* 
  செங்கண் கருமுகிலே! தாலேலோ* 
   தேவகி சிங்கமே! தாலேலோ   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சங்கில் - சங்குகளில்(சிறந்த);
வலம்புரியும் - வலம்புரிச்சங்கையும்;
சே அடி -  செவ்விய திருவடிகளில் (சாத்தத்தகுந்த);
கிண்கிணியும் - சதங்கையையும்;
அம் கை - அழகிய கைகளுக்கு உரிய;

விளக்க உரை

உரை:1

தேவதைகள் பலர் கூடிப் பல திருவாபரணங்களை அனுப்புகிறார்களென்று சொல்லித் தாலாட்டுகிறாள். சங்கில் + வலம்புரி, சங்கின் வலம்புரி,‘ ‘குறில்செறியாலன அல்வழிவந்த. . . ’என்ற நன்ணூற் சூத்திரத்திள் இறுதியில் ‘பிற’ என்றமிகையை நோக்குக. நான் திருமார்வுக்கு அலங்காரமாகச் சாத்தத்தக்க நாணாகவுமாம். செங்கண் + கருமுகில், செங்கட்கருமுகில். கருமுகிலே! முற்றுவமை.

உரை:2

விரிந்து பரந்த விண்ணுலகத்தில் வாழும் தேவர்களால் தொழப்படும் பெருமை பெற்ற, சிவந்த தாமரை போன்ற திருக்கண்களைப் பெற்று சிறந்த ஆண்மகன் - புருஷோத்தமன் - என்று பெயர் பெற்ற திருமாலே ஆனாலும் ஆகட்டும், தனது கையில் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லாதவரை கொய்து முகரத் தகுந்த இளந்தளிர் போன்ற மேனியை உடைய மகளிர் தம் கைகளால் வணங்கி விடை கொடுத்து அனுப்புவார்கள்!.பொது மகளிருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை; பொருளுடையவன் என்பது ஒன்றே தகுதி என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.

English Translation

Gods of the wide sky have sent these jewels of dextral conch, anklets, bangles, chains and waist thread. O, Red-eyed cloud-hued Lord, Talelo. O, Devaki’s lion club, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்