விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பருப்பதத்துக் கயல்பொறித்த*  பாண்டியர்குலபதிபோல்* 
  திருப்பொலிந்தசேவடி*  என் சென்னியின் மேல் பொறித்தாய்* 
  மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே* 
  உருப்பொலிந்தநாவினேனை*  உனக்கு உரித்தாக்கினையே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பருப்பதந்து - மஹமேரு பர்வதத்தில்
கயல் - (தனது) மகரகேதுவை
பொறித்த - நாட்டின்
பாண்டியர்குலபதிபோல் - பாண்டிய வம்சத்து அரசனைப்போல்,
திருபொலிந்து - அழகு விளங்கா நின்றுள்ள

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், “உன்னுடைய விக்கிரமமொன் றொழியாமலெல்லாம், என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி யெழுதிக்கொண்டேன்” என்றது எம்பெருமானுடைய நிர்ஹேதுக கருணையினால் என்பதை இப்பாட்டாலருளிச் செய்கிறார். பரமபதத்தை இருப்பிடமாகவுடைய எம்பெருமான் அங்கு நின்றும் இவர் பக்கலிலே வருமளவு முண்டான பாவக்காடுகளைப் பாழாக்கியும், விரோதிகளைப்போக்கியும், இவருடைய சென்னித்திடரில் பாதவிலக்கினை வைத்தருளினமைக்கு ஒரு த்ருஷ்டாந்தல் காட்டுகிறார். முதலடியில், பாண்டியகுலத்துத் தலைவனாயிருந்த மலயத்வஜ ராஜன் தனது நாட்டில் நின்றும் மஹாமேருகிரியளவும் வழியிலுள்ள காடுகளைக் களைந்து பகைவர்களைக் காப்பாற்றித் தனக்கும் தனது பரிஜனங்களுக்கும் கடை எளிதாம்படி பெருவழியாக்கிக்கொண்டு சென்று, தனது வெற்றி தோற்றும்படி அம்மேருகிரியின் சிகரத்தில் தனது மதுரகேதுவை நாட்டிப்போயினனென்று வரலாறு அறிக. பாண்டியர்குலபதி கயல்பொறித்த இடமாகிய, பருப்பதத்தை இங்கு உவமை கூறியதனால், பெறுதற்கரிய இப்பேற்றைப் பெறுவதற்காகத் தாம் ஒரு முயற்சியும் செய்திலர் என்பது போகரும். பருப்பதம்- *** என்ற வடசொல்; உருப்பசி எனத் திரிவதாக்கும். கயல்- மீன்; இது, மன்மதனுக்குக் கேதுவானதுபோல, பாண்டியர் குலபதிக்கும் கேதுவாயிருந்ததென்க. சே அடி- ருஜுவான திருவடி என்றுமாம்; செம்மை + அடி, சேவடி. செம்மை- செந்நிறமுமாம்; ருஜுவாயிருக்குத் தன்மையுமாம். பொறித்தாய், ஒசித்தாய், அடர்த்தாய் என்ற மூன்றும் விளி. ‘உருப்பொலிந்த’ என்று- எம்பெருமானைத் துதிப்பதனால் நாவுக்குப் பிறந்த புகர்ப்பைக் கூறியவாறுமாம். “(உருப்பொலிந்த காவினேனை.) செவ்வாய்க்கிழமையை ‘மங்களவாரம்’ என்னுமாபோலே விபரீதலாக்ஷணை; இதர விஷயங்களிலேயிறே என் நாக்கு உருப்பொலிந்தது” என்பது ஆன்றோரைவாக்கியம்.

English Translation

Like the Pandya king planting his fish-emblem flag on the high mountain, my Lord, you too have planted your auspicious lotus-feet on my head. My tongue is swollen with reciting your names incessantly. You have taken me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்