விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உன்னுடைய விக்கிரமம்*  ஒன்றோழியாமல் எல்லாம்* 
  என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்* 
  மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட*  இராமநம்பீ!* 
  என்னிடைவந்து எம்பெருமான்!*  இனியெங்குப்போகின்றதே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன் - (துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க - அழியும்படி
மழு - மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட - வலக்கையில் ஏந்தியிரா நின்றுள்ள
இராமன் - பாசுராமனாய்த் திருவவதரித்த

விளக்க உரை

“உன்னைக் கொண் டென்னுள் வைத்தேன்” என்றார்; இப்பாட்டில், வைத்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார். முதற் பாட்டில் “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா” என்று தொடங்கினமையால், அந்த மல்லவதம் முதலிய சிறுச்சேவகங்களை யெல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறாரென்க. “உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்னுமளவே போதுமாயிருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷித்துக் கூறினமைக்குக் கருத்து என்னவெனில்; வியாஸர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிரமங்கள் தமக்கு விஷயமானபடியைக் குறித்தவாறு; கீழ் இரண்டாம் பந்தில் ஏழாந்திருமொழியில் “சீமாலிக னவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ பெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றருளிச் செய்த விருத்தாந்தமும், மூன்றாம்பத்தில் பத்தாந்திருமொழியில், “எல்லியம்போ தினிதிருத்த லிருந்தோ ரிடவகையில், மல்லிகைமா மாலை கொண்டங்கார்த்தது மோரடையானம்” என்றருளிச்செய்த விருத்தாந்தமும் மற்ற முனிவர்கட்கன்றி இவ்வாழ்வார் ஒருவர் தமக்கே ஞானவிஷய மாயினவாறு காண்க. விக்கிரம் - வினா : என்ற வடசொற்றிரிபு. (சுவர் வழி எழுதிக்கொண்டேன்) சுவரில் சித்திரமெழுதினால் அது கண்ணுக்குத் தோற்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சென்னுஞ் சுவரில் அமைத்து விளக்கிக்கொண்டே னென்றபடி. ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதிநல மருளப்பெற்றமையால், அவனுடைய விக்கிரமங்க ளனைத்தையும் குறையறக்கண்டு அநுபவித்தன ரென்றுணர்க.

English Translation

Like inscriptions on the temple wall, I have written into my heart, all the valiant deeds of yours without omission. O Lord Rama who wielded the axe to subdue insolent kings! My Master! Having come unto me, now where can you go?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்