விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்னைக்கொண்டு உரைகல்மீதே*  நிறமெழவுரைத்தாற்போல்* 
    உன்னைக்கொண்டு என்நாவகம்பால்*  மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*
    உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்*  என்னையும்உன்னிலிட்டேன்* 
    என்னப்பா! என்னிருடீகேசா!*  என்னுயிர்க்காவலனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காவலனே - (அந்யசேஷமாகாதபடி) காக்கவல்லவனே!
பொன்னை - ஸுவர்ணத்தை
நிறம் ஏழ - நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு - உரைக்கல்லில் இட்டு
உரைத்தால் போல் - உரைப்பதுபோல

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அம்ருதத்ருஷ்டாந்தங் கூறினர்; இப்பாட்டில் ஸ்வர்ணத்ருஷ்டாந்தங் கூறுகின்றனர். உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரைகல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்; அதுபோல், பொன்போன்ற உன்னை, அற்பசாரங்களில் மண்டின என் நாக்காகிற உரைகல்லில் இட்டு உரைத்தேன்; நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவதுபோல், நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டு ரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப்பெற்றாய் என்பது, முன்னடிகளின் கருத்து. உரைகல்-உரைத்துப் பார்ப்பதற்கு உரிய இடமாகிய கல்; ***-***- மென்பர். நிறமேழ - நிறமறிவதற்காக என்றே பொருளாகும்; ‘நிறமுண்டாம்படி’ என்பது பொருளன்று; பொல்லாப்பொன்னை உரை கல்லிலே உரைத்த மாத்திரத்தினால் அதற்கு நல்ல நிறமுண்டாகமாட்டாதே; உள்ளமாற்றேயன்றோ காணப்படுவது. நல்ல பொன்னையும் பொல்லாப் பொன்னையும் உரைகல்லில் நிறம்பார்க்கவிறே உரைப்பது. ஆதலால், நிறமெழ என்பதற்கு, ‘நிறமறியும்படி’ என்றே பொருள்கொள்க. ‘உன்னைக்கொண்டு’ இத்தியாதி இரண்டாமடி நைச்சியநுஸந்தாநம். ஒருவராலும் துதிக்கவொண்ணாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது - அவ்விஷயத்தைத் தூஷிப்பதுபோலாகுமேயன்றி, பூஷிப்பதாக மாட்டாதானமைபற்றி, மாற்றின்றி என்கிறார். இங்கு, இன்றி என்பதற்கு - ‘இல்லாமற்போம்படி’ எனப் பொருள் கொள்ளவேணும். “மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்- மாற்றழியும்படி’ பேசிக்கொண்டு நின்றேன். நல்லபொன்னை நல்லகல்லிலே உரைத்தாலிறே மாற்று அறியலாவது; தரமல்லாத கல்லிலே உரைப்பாரைப்போலே, உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன்; பொன் என்கிறது -ஈச்வரனை; கல் என்கிறது - நாக்கை” என்ற வியாக்கியான வாக்கியங் காணத்தக்கது.

English Translation

Like rubbing nugget on a touchstone to check its purity, I have rubbed your name on my tongue. Forever, I have placed you in myself and myself in you. My lord Hrishikesa my Father, my Guardian-spirit!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்