விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடல்கடைந்து அமுதம்கொண்டு *  கலசத்தைநிறைத்தாற்போல்* 
  உடலுருகிவாய்திறந்து*  மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்* 
  கொடுமை செய்யும்கூற்றமும்*  என்கோலாடிகுறுகப்பெறா* 
  தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தட வரை - பெரிய மலைபோன்ற
தோள் - தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ - திருவாழி யாழ்வானைத் திருக்கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில் - சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே - வீரனே!

விளக்க உரை

கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்த வாறுபோல, உன்னை நான் என்னுள்ளே நிறைத்துக்கொண்டேன் என்கிறார் முன்னடிகளால், ஸம்ஸாரமாகிய கடலினுள் ஈச்வரனாகிற அமுதத்தைத் தேர்ந்தெடுத்து ஆத்மாவாகிற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக்காண்டனரென்க. கலசம் - தற்சமவடசொல்; பாத்திரமென்று பொருள் - நிறைந்தாப்போல் = நிறைத்த, ஆ, போல், எனப்பிரியும்; ஆற என்றசொல்: ஆ எனக்குறைந்துகிடக்கிறது; ஆறு - பிரகாரம். நிறைத்த+ஆ, நிறைத்தலா எனச்சந்தியாக வேண்டுமிடத்து, அங்ஙனாகாதது, தொகுத்தல் விகாரம். (உடலுருகி இத்யாதி) பகவதநுபவாதிசயத்தினால் ஆத்துமா வெள்ளக்கேடு படாமைக்காக இட்ட கரைபோன்ற சரீரமும் உருகப்பெற்றது. எனவே, இவ்வாழ்வார்க்குப் பகவத் விஷயத்திலுள்ள அவகாஹம் அற்புதமென்பது போதரும். “நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சே இடிந்து உகும்” என்று உருவற்ற நெஞ்சே உருகுகிறதென்றால் உடலுருகச் சொல்லவேணுமோ? “ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே, நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே!” என்ற திருவாய்மொழியையுங் காண்க. ‘உடலும் நெஞ்சுமுருகப் பெற்றதாகில், பின்னை இவ்வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ஙனமே?” என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க; ‘விட்டுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்’ என்பராதலால், அவ்வமுதம் வியாபித்த விடமெங்கும் திருவுள்ளம் வியாபிக்குமெனக் கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்தனராம்.

English Translation

Like churning the ocean and filling the pot with ambrosia, I melted out my mouth, drank deep and filled myself with you. O Lord with mountain-like arms, bearing the discus and the bow. Now the evil-intending Yama cannot enter the bounds of my domain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்