விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எம்மனா! என்குலதெய்வமே!*  என்னுடைய நாயகனே!* 
  நின்னுளேனாய்ப் பெற்றநன்மை*  இவ்வுலகினில் ஆர்பெறுவார்? 
  நம்மன்போலே வீழ்த்தமுக்கும்*  நாட்டிலுள்ளபாவமெல்லாம் 
  சும்மெனாதே கைவிட்டோடித்*  தூறுகள்பாய்ந்தனவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என்  குல தெய்வமே - என் குடிக்குப் பரதேவதையானவனே!
என்னுடைய நாயகனே - எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய் - உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும் - உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்
எம்மெனானது - மூச்சுவிடவும் மாட்டாமல்

விளக்க உரை

கீழ் “பிறவியென்னுங் கடலும் வற்றிப் பெரும்பதமாகின்றதால், இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்” என்ற தம்முடைய விரோதிகள் ஒழிந்தமையையும் அபேக்ஷிதம் தலைக்கட்டிமையையும் அருளிச்செய்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நீரொருவர் மாத்திரம் பேறுபெற்றால் அது என்னாகும்? உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கும் விரோதி கழிந்தலாலன்றோ? நீர் பேறு பெற்றீராவது” என்ன, அதற்கு ஆழ்வார், “என் நாயகனே! நான் உன்னுடைய பொருளாக வாய்ந்தபின்பு என்னைப்போல் நன்மைபெற்றார் இவ்வுலகில் யாரேனுமுண்டோ? என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி என்னோடு ஸம்பந்தம் பெற்றாருடைய விரோதிகள் கழிந்தது மன்றி, இந்நாட்டிலுள்ள ரனைவருடையவும் விரோதிகளுமன்றோ கழிந்தன; இதற்கு மேற்படவும் ஒரு நன்மையுண்டோ?” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு. எம்மனா - எம் மன்னா; தொகுத்தல்; ‘மன்னன்’ என்ற சொல்லின் ஈறுதிரிந்த விளி. “எம்மனாயென் குலதெய்வமே” என்றும் ஒரு பாடம். அப்போது ‘எம் அனாய்’ எனப்பிரியும். அனாய்-அன்னை என்பதன்விளி; தொகுத்தல் ; எனக்குத் தாய்போலப் பிரியமே நடத்துமவனே! என்றபடி. குலதெய்வம் - வடமொழித் தொடர். “நம்மன்போல வீழ்த்தமுக்கும்” என்று - பாவங்களின் கொடுமையைக் கூறியவாறு. “நாட்டுள பாவமெல்லாம்” என்றும் பாடமுண்டென்பர். (சும்மெனாதே) ‘கப் சிப், வாயைத்திறவாமல் ஓடிப்போய்விட்டான்’ என்பதுபோல ; போவது பிறர்க்குத் தெரியாதபடி போயினவென்க. (தூறுகள் பாய்ந்தன) “வனோ மறிகடலோ மாருதமோத தீயகமோ, நானோ ஒருங்கிற்றுங் கண்டிலமால்- ஆனீன்ற, கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்ததார். தாள் பணிந்தோம், வன்துயரை யாவாமருங்கு” என்றார் நம்மாழ்வார். “இவ்விடத்தில், தூறு என்கிறது ஸம்ஸாரிகளை” என்றருளிச் செய்வாராம் திருக்கோட்டியூர் நம்பி. தூறென்று செடியாய், கிளைவிட்டுக் கிடக்கிற ஸம்ஸாரத்தைச் சொல்லக்கடவதிறே. “முற்றவிம் மூவுலகும் பெருந்தூறாய்த் தூற்றிற்புக்கு” என்ற திருவாய்மொழிகாண்க.

English Translation

My master, my tutelary Deity, my Liege! Who else in the world can enjoy the bliss that I enjoy in you. All the miseries of the world that hung heavily like the pall of death have released their hold, and hidden themselves in bushes without a whimper!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்