விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சென்னியோங்கு*  தண்திருவேங்கடமுடையாய்!*  உலகு- 
  தன்னை வாழநின்ற நம்பீ!*  தாமோதரா! சதிரா!* 
  என்னையும் என்னுடைமையையும்*  உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு* 
  நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தண் - குளிர்ந்த
திருவேங்கடம் - திருவேங்கட மலையை
உடையாய் - (இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை - உலகத்தவர்களை
வாழ - வாழ்விப்பதற்காக

விளக்க உரை

எம்பெருமானே! நெடுநாளாய் உன் திறத்தில் விமுகனாய் விஷயாந் தரங்களைநச்சி அங்குமிங்கும் அலைந்துதிரிந்த அடியேனை, உனது திவ்ய கல்யாண குணகணங்களைக்காட்டி வசப்படுத்திக்கொண்டு, ஆத்மாத்மீயங்களை யெல்லாம் உனக்கே சேஷப்படுத்திவிட்டு உன் அருளையே புருஷார்த்தமாகப் பிரதிபத்தி பண்ணிக்கொண்டிருக்கும்படியான நிலைமையயும் அடியேனுக்கு அமைத்தருலினாய், இதனால் உன் அபேக்ஷிதமும், தலைக்கட்டிற்று என் அபேக்ஷிதமும் தலைக்கட்டிற்று; இனிச் செய்யவேண்டுவதொன்றில்லை; இன்னும் என் செய்ய வேணுமென்ற உன் திருவுள்ளத்தில் ஓடுகிறது என்று கேட்கிறபடி. திருவேங்கடத்துக்குத் தண்மை - ஸம்ஸாரதாபங்களை ஆற்றவற்றாயிருக்கை. உடையாய்- உடையான என்பதன் ஈறு திரிந்தவிளி. வாழ - பிறவினையில் வந்த தன்வினை; ***-***-***-என்பர் வடநூலார். ‘உலகுதன்னை’ என்பதை உருபுமயக்கமாகக் கொண்டால், உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம். தாமோதரன் - * கண்ணிநுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயனாதலால், அத்தாம்பின் தழும்பு திருவயிற்றில் தோன்றப்பெறவனென்றபடி. சதிர் - ருஜுவாயிருக்குந் தன்மை. கீழ் திருப்பல்லாண்டில், “தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின், கோயிற்பொறியாலே யொற்றுண்டு நின்று” என்றதை-, இப்பாட்டில் மூன்றாமடியால் விவரிக்கிறார். ஆத்துமாவுக்குச் சக்கரப்பொறி யொற்றுகையாவது - அநந்யார்ஹசேஷத்வஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கை. அது பிறந்தமை தோற்றவிறே தோளுக்குத் திருவிலச்சினையிடுவது. ‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது - உபாயாந்தரத்திலும் ருசிகுலையப் பெற்றேன் என்றபடி

English Translation

O Lord of cool Tiruvenkatam where mountains rise high, waiting to give succour to the world of mortals, O Damodara, most wise! My body and soul are branded with your discus emblem; I wait to receive your command. Pray what do you intend for me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்