விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்தம்பிரானார்*  எழிற் திருமார்வற்குச்*
    சந்தம் அழகிய*  தாமரைத் தாளற்கு*
    இந்திரன் தானும்*  எழில் உடைக் கிண்கிணி* 
    தந்து உவனாய் நின்றான் தாலேலோ* 
    தாமரைக் கண்ணனே! தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம்தம் பிரானார் - எமக்கு ஸ்வாமியாய்;
எழில் - அழகிய;
திருமார்வார்க்கு - திருமார்பை யுடையாய்;
சந்தம் அழகிய - நிறத்தாலழகிய;
தாமரை தாளர்க்கு - தாமரைபோன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு;

விளக்க உரை

உரை:1
 
என் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ! தாமரைக்கண்ணனே தாலேலோ!  அவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான். 
 
உரை:2

இந்திரன் அரைச்சதங்கையைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்து அதோ நிற்கின்றான்காண் என்று சொல்லித் தாலாட்டுகிறாள். முன்னிரண்டடிகளும் படர்க்கையாயிருந்தாலும் முன்னிலைப் படர்க்கையெனக் கொள்க. எழில் திருமார்வனும் தாமரைத்தாளனுமான உனக்கு என்றபடி. ‘கிண்கிண்’ என்று ஒலிப்பதுபற்றிச் சதங்கைக்குக் கிண்கிணி என்று காரணப் பெயராயிற்று. உவன் - நடுவிலிருப்பதைக் காட்டுஞ் சுட்டெழுத்தான ‘உ’ என்பதனடியாய் பிறந்த ஆண்பாற் பெயர்; அதிக தூரத்திலும் அதிக ஸமீபத்திலுமில்லாமல் நடுத்தரமாய் இருப்பவனென்று பொருள்.

English Translation

For my master of radiant chest and beautiful lotus feet, Indra gave these ankle-bells, and stands betwixt, Talelo. O, Lotus-eyed Lord, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்