விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்*  உன்தன் இந்திரஞாலங்களால்* 
    ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்*  நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
    அளித்தெங்கும் நாடும்நகரமும்*  தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று* 
    தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளித்து - நெருங்கி
தம்முடைய - தங்கள் தங்களுடைய
தீ வினை - துஷ்டகர்மங்களை
தீர்க்கல் உற்று - ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து - ஆரவாரித்துக்கொண்டு
வலம் செய்யும் - பிரதக்ஷிணம் செய்யப்பெற்ற

விளக்க உரை

ஏழையாயிருப்பவர் செல்வர் மாளிகைவாசலைப் பற்றிக்கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னை விடமாட்டோம்’ என்ற உறுதியுடன் அவர்களை வளைத்துக் கொண்டிருப்பது போலவும், பரதாழ்வான் சித்திரகூடந்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற்போலவும் நான் உன்னை வளைத்துக்கொண்டேன்; உன்னால் தப்பிப்போக வொண்ணாது என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்; *** - *** - யா’ என்ற என் மாயையில் உலகமுழுவதையும் பிணிப்புண்டிருக்கச் செய்யவல்ல யான், உம்முடைய வளைப்பில் நின்றும் என்னைத் தப்பவைத்துக் கொள்ளவல்லேனல்லனோ” என்ன; அதற்கு ஆழ்வார், ‘உன் பிராட்டியின்மேலாணை; நீ தப்பிப்போய் உன்னை ஒளித்துக் கொள்ளலாகாது” என்று ஆணையிட; எம்பெருமான், “ஆழ்வீர்! இது என் காணும்? ஆணையிடுவதற்கு இப்போது என்ன பிரஸத்தி?” என்று கேட்க; அதற்கு ஆழ்வார், “எம்பெருமானே! ‘*** - (அடியார்களை ஒருபடியாலும் கைவிடமாட்டேன்) என்று நீ ஓதிவைத்ததெல்லாம் பொய்யாய்த்தலைக்கட்ட நேரிட்டதே என்று ஆணையிடுகிறேன்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டின் முன்னடி. “என்னெஞ்சத் துள்ளித்திங்கினிப்போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் வளைத்து வைத்தேன்” என்ற கலியனருளிச்செயல், முதல் அரையடியோடு ஒப்புநோக்கத்தக்கது. இந்த்ரஜாலம்- கண்கட்டுவித்தை. ஒளித்திடில் - நீ மறைந்தாயாகில் என்றபடி. (நின்திருவாணைகண்டாய்.) “மாயஞ்செய்யேலென்னை உன் திருமார்வத்து மாலை நங்கை, வாசஞ்செய் பூங்குழலாள், திருவாணை நின்னாணை கண்டாய்” என்ற திருவாய்மொழி அறிக. ஆணையிட்டால் அதை மறுக்கமுடியாதென்று கருத்து. (நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை.) “கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக் கடைக் கணித்தாங்கே ஒருத்திதன்பால், மருவினம்வைத்து மற்றொருத்திக்குரைத்து ஒரு பேதைக்குப் பொய்குறித்துப் புரிகுழன்மங்கை யொருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தாயுன் வளர்த்தியோடே வளர்கின்றதாலுன்றன் மாயைதானே” என்ற பெருமாள் திருமொழியை நினைக்க. அல்லை - முன்னிலையொருமை வினைமுற்று.

English Translation

O Lord of Tirumalirumsolai, my Master! Cutting asunder the snares, pulling me out of a whirlpool of misery, you have entered my person, I know it. Now will I let you go? Devaki has lost her six children through Kamsa’s cruelty but in a thrice you entered her womb, and were born to her as her child!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்