விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறகல் உறகல் உறகல்*  ஒண்சுடராழியே! சங்கே!* 
    அறவெறி நாந்தகவாளே!*  அழகியசார்ங்கமே! தண்டே!*
    இறவுபடாமல்இருந்த*  எண்மர் உலோகபாலீர்காள்!* 
    பறவைஅரையா! உறகல்*  பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் சுடர் - அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியே - திருவாழியாழ்வானே!
எறி - (எம்பெருமானால்) வீசப்படுகின்ற
நாந்தக வானே! - நந்தகமென்கிற திருக்குற்றுடைவானே!
அழகிய சார்ங்கமே - அழகு பொருந்திய

விளக்க உரை

இவ்வாழ்வார் மற்றை ஆழ்வார்களைப் போலன்றி, ‘எம்பெருமானுக்கு என்வருகிறதோ’ இதுவரை தம்மை எம்பெருமானால் காக்கப்பட்டவராக அநுஸந்தித்துப் போந்தவிலர், அவனுக்குங் காவல் தேடுகிறார், இப்பாட்டில், எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களையும், அஷ்டதிக் பாலகர்களையும், வாஹநத்தையும் விளித்து, நீங்களெல்லாருமாகச் சேர்ந்து உறங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்து எம்பெருமானுடைய படுக்கைப்பற்றை நோக்கிக் கொண்டிருங்கள் என்கிறார். உறகல்- உறங்கவேண்டா என்று பொருளையுடைய உறங்கல் என்னும் எதிர்மறை வியங்கோள் வினைமுற்றின் சிதைவு. ‘உறகல் உறகல் உறகல்’ என்ற அடுக்குத்தொடர், அச்சம் பற்றியது. ‘இறவுபடாமல் உறகல்’ என இயையும்; அன்றி, ‘இறவுபடாமல் இருந்த’ என அடைவே இயைத்து, என்றும் இறவாமல் வாழ்கின்ற என்று பொருள் கொள்வாருமுளர் . (எண்ம ருலோக பாலீர்காள்.) “இந்திரனங்கி யாமனிருதி வருணன், வந்தவாயு குபேரனீசாநன், என்ன வெண்டிசை யுலோகபாலகர்” என்பது திவாகரம்.

English Translation

Ye radiant discuss and conch, Vigil! Ye deadly dagger Nandaka, Vigil! Ye beautiful Sarnga bow, Vigil! Ye eternal sentinels of the eight Quarters, Ye king of birds, be vigilant and stand guard over my Lord’s bed-chamber!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்