விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உடையார் கனமணியோடு*  ஒண் மாதுளம்பூ* 
  இடை விரவிக் கோத்த*  எழிற் தெழ்கினோடும்*
  விடை ஏறு காபாலி*  ஈசன் விடுதந்தான்* 
  உடையாய்! அழேல் அழேல் தாலேலோ* 
  உலகம் அளந்தானே! தாலேலோ

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உடை ஆர் - திருவரைக்குச் சேரும்படியான;
கனம் மணியோடு - பொன் மணியையும்;
இடை - நடுநடுவே;
விரவி - கலந்து;
கோத்த - கோக்கப்பட்ட;
 
 

விளக்க உரை

உரை:1

உன் இடுப்பின் அழகிற்கு ஏற்ற அழகிய ஒலி எழுப்பும் பொன்மணிகளோடு அழகிய பொன் மாதுளம்பூ இடையிடையே விரவிக் கோத்த அரைஞானை, காளை வாகனம் ஏறும் மண்டையோடு ஏந்தியதால் காபாலி என்று பெயர் உடைய ஈசன் அனுப்பிவைத்தான். எம்மை உடைய தலைவனே அழாதே அழாதே தாலேலோ! உலகம் அளந்தவனே தாலேலோ!

உரை:2

சிவபிரான் மாதளம்பூக் கோவையென்கிற அரைவடம் முதலியவற்றை அனுப்பியிருக்கிறான் (அவற்றைச் சாத்திக்கொள்) என்று சொல்லித் தாலாட்டுகிறான். உடை என்பது வஸ்திரத்துக்கு வாசகமாயினும் இங்குத் தானியாகு பெயராய் இடையைக்காட்டிற்று. தேழ்கு - அரையில் சொருகும் கத்தி. சிவன் ரிஷபவாஹனனாதாலால் விடையேறு என்றும், பிரமனுடைய ஐந்து தலைகளிலொன்றைப் பறித்துவிட்டதனால் அக்கபாலம் அப்படியே கையிலொட்டிக் கொண்டதுபற்றிக் கபாலி என்றும், அணிமா மஹிமா கரிமா லகிமா ப்ராப்தி ப்ராகாம்யம் ஈசத்வம் வசித்வம் என்று சொல்லப்படுகிற அஷ்டைச்வரியங்களையுடையனாகையாலே ஈசன் என்றும் சொல்லப்பட்டான். கனகம் என்ற வடசொல் கனம் எனக்குறைந்தது. உடையாய் - உடையான் என்பதன் ஈறுதிரிந்தவிளி.

English Translation

The buffalo-rider Siva has sent you this girdle of golden beads alternating with beautiful pear shaped drops, perfectly befitting your waist. O, My Master, don’t cry, Talelo. You measured the Earth, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்