விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்*  நாதனே! நரசிங்கமது ஆனாய்!* 
  உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்*  ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*
  கம்பமா கரிகோள் விடுத்தானே!*  காரணா! கடலைக்கடைந்தானே!* 
  எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!*  ஏழையேன் இடரைக் களையாயே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மா கம்பம் - மிக்க நடுக்கத்தை அடைந்த
கரி - கஜேன்திராழ்வானுடைய
கோள் - சிறையை
விடுத்தானே - விடுத்தருளினவனே!
காரணா - ஜகத்காரண பூதனே!

விளக்க உரை

உன் திருவடிகளில் நிரந்தர ஸேவை பண்ணுதற்கு விரோதியான பாபங்களைப் போக்கியருள வேணுமென்று எம்பெருமானை இரக்கிறார். ‘நரசிங்கம்தானாய்’ என்பது- எம்பெருமானைத் தவிர மற்றையோரை நம்பக் கூடாமைக்கும் அன்புகொண்டு ஏத்துமவர்களைக் காக்கின்ற பெருமானது தலைமைக்கும் உதாரணமாகும். “உம்பர்கோ னுலகேழுமளந்தாய்” என்பதை ஒருவாக்கியமாகவே அந்வயித்து, இந்திரனுக்காக ஏழுலகங்களையு மளந்தவனே! என்றும், பிரமனது ஏழுலகங்களையு மளந்தவனே! என்று முரைக்கலாம்

English Translation

O Faith, O Lord of praiseworthy poets, O Lord who became a man-lion, O Lord who measured the seven worlds, O Lord of Time, O Lord who wielded the discus and saved the elephant-in-distress, O First-cause, O Lord who churned the ocean, my Lord sweet as Lord who churned the ocean, my Lord sweet as honey! Pray rid this poor wretched self of misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்