விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்ணமால் வரையே குடையாக*  மாரிகாத்தவனே! மதுசூதா!* 
  கண்ணனே! கரிகோள்விடுத்தானே!*  காரணா! களிறுஅட்டபிரானே!*
  எண்ணுவார் இடரைக் களைவானே!*  ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!* 
  நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்*  நன்மையே அருள்செய் எம்பிரானே!  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்ணம் - அழகிய
மால் - பெரிய
வரை - கோவர்த்தன மலை
குடை ஆக - குடையாக (அமைய)
மாரி - மழையினின்றும்

விளக்க உரை

அட்ட - அடு என்ற குறிலினைப் பகுதியாகப் பிறந்த பெயரெச்சம். ஏத்த+அரு, ஏத்தரு; தொகுத்தல் விகாரம் “நன்மையே அருள் செய்யும் பிரானே” என்றம் பாடமுண்டு; “அருள் செய்யும்” என்பதற்குப் பொருளதுவே: “பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மையிற், சொல்லாதாகுஞ் செய்யுமென முற்றே” என்ற இலக்கணத்தின்படி ‘நீர் செய்யும்’ என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் ஒவ்வாதாயினும், இது புதியன புகுதலெனக் கொள்க.

English Translation

O Lord who held aloft a mount as a shield against a hailstorm, O Madhusudana, O Krishna, O Lord who saved the elephant Gajendra in distress, O Lord who killed the rutted elephant Kuvalayapida. O First-cause, O Refuge of devotee, O Lord of glory beyond praise, pray grant me the joy of worshipping you everyday.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்