விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாணிக்கம் கட்டி*  வயிரம் இடை கட்டி* 
  ஆணிப் பொன்னால் செய்த*  வண்ணச் சிறுத்தொட்டில்*
  பேணி உனக்குப்*  பிரமன் விடுதந்தான்* 
  மாணிக் குறளனே தாலேலோ* 
  வையம் அளந்தானே தாலேலோ (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாணிக்கம் - மாணிக்கத்தை;
கட்டி - (இரண்டருகும்) கட்டியும்;
வயிரம் - வயிரத்தை;
கட்டி - கட்டியும்;
இடை - நடுவில்;

 

விளக்க உரை

உரை:1

திவ்யமான தொட்டிலைப் பிரமன் கொணர்ந்து ஸமர்ப்பித்தானென்கிறாள். மாணிக்கம் - நவரத்நங்களுள் ஒன்று : இது செந்நிறம் உடையது; (நூல்களில் கருமாணிக்கமெனவருதல் இல்பொருளுவமையாம்). ஆணிப்பொன் - மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன்; இதுக்கு மேலே மாற்றில்லையென்னும்படியான சிறந்தபொன் என்றுரைப்பர். தால் ஏல் ஓ= தால் - ‘தாலு’ என்ற வட சொல் விகாரம், தாடையென்றுபொருள்; ஏலே ஓ=அசைச்சொற்கள்; குழந்தைகளைத் தொட்டிலிவிட்டுப் பெண்கள் ‘உளு உளு உளு ஆயீஇ! என்று உள்தாடையை நாவாலே ஒலித்துச் சீராட்டுதலைத் ‘தாலேலோ’ என்று வழங்குதல் மரபு. மாணிக்கம், வயிரம், வண்ணம், பிரமன் - வட சொல் விகாரங்கள்.

உரை:2

மாணிக்கங்களை இருபுறமும் கட்டி இடையில் வயிரங்களைக் கட்டி மாற்றில்லாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறிய தொட்டிலை மிகவும் விருப்பமுடன் பிரமன் உனக்காகத் தந்தான்! உன்னுடைய உடைமைகளை இரந்து பெறுவதற்காக குள்ள மாணவனாக வந்த கண்ணனே தாலேலோ! உன்னுடைமைகளான மூவுலகங்களையும் பெற்ற மகிழ்ச்சியில் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகங்களை எல்லாம் அளந்தவனே தாலேலோ! 

English Translation

O, Naked manikin, Talelo,--Brahma has sent you this little golden cradle studded with rubles and diamonds, --You measured the Earth, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்