விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை*  துடவையும் கிணறும் இவைஎல்லாம்* 
  வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே*  வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*
  நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது*  நச்சுவார் பலர் கேழலொன்றாகி* 
  கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!*  குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓசித்தானே - முறித்தெறிந்தவனே!
தோட்டம் - தோட்டமும்
இல்லவள் - மனைவியும்
ஆ - பசுக்களும்
தொழு - மாட்டுத்தொழுவமும்

விளக்க உரை

தோட்டம் முதலிய போஷக வஸ்துக்களனைத்தும் உன் திருவடிகளே யெனள்று அறுதியிட்டிரா நின்றேன் என்பது முன்னடிகளின் தேர்ந்த கருத்து. இல்லவள் - வடமொழிடியில் ‘***-’ என்ற சொல்லின் பொருள் கொண்டது. துடவை - ஸுக்ஷேத்ரம் . வளைப்ப+அகம், வளைப்பகம் ; தொகுத்தல் விகாரம். தோட்டம் முதலியவற்றைப் பொன்னடிக்கீழ் வளைப்பவகுத்துக் கொண்டிருக்கையாவது- எம்பெருமான் திருவடியை ஏழுவகுப்பாகப் பிரித்து, ஒருவகுப்பைத் தோட்டமாகவும், மற்றொருவகுப்பை இல்லவளாகவும், ..... மற்றொரு வகுப்பைக் கிணறாகவும் பிரதிபத்தி பண்ணுகையோயாம். எம்பெருமானது திருவடியையொழிய வேறொன்றைப் போஷகமாக மதிப்பதில்லை யென்றவாறு. இனி முன்னடிகளுக்கு வேறுவகையாகவும் பொருள் கொள்ளத்தக்கதாகும்; அதாவது;- தோட்டம் ..... கிணறுமாகிய இவையெல்லாதம், வளைப்பு அகம்- சூழ்ந்திருக்குமிடம், உன் பொன் அடிக்கீழ் - உனது திருவடிநிழலிலே (என்று), வகுத்துக்கொண்டிருந்தேன். (என்நெஞ்சினால் அத்திருவடியைச்) சூழ்ந்துகொள்ளா நின்றேன், என்பதாம். உன்திருவடி நிழலையே எல்லாப் பொருளுமாக ப்ரதிபத்திபண்ணி, அத்திருவடியை நெஞ்சினால் வளைத்துக்கொண்டேன் என்பது கருத்து. “உன் பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம் நானெங்குங் காண்கின்றிலேன்” என்று மேல் அருளிச்செய்வது காண்க. இப்பொருளில், அகம் என்பதற்கு, ‘இருப்பிடம்’ என்று பொருள். (தொகுத்தல் விகாரமுமில்லை.)

English Translation

O Lord who came as a boar and lifted the Earth on tusk-teeth, O Lord who broke a tusk and killed the rutted elephant! ‘This hard for me with people of the world, though many relish worldly life. Orchards, wife, cattle, shed, fields and well, all these without a lack I have found in the refuge of your lotus-feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்