விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்*  நாரணா! என்னும் இத்தனைஅல்லால்* 
    புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்*  புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*
    உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்*  ஓவாதே நமோநாரணா! என்பன்* 
    வன்மைஆவது உன் கோயிலில்வாழும்*  வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நன்மை தீமைகள் ஒன்றும் - (வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறியேன் - அறிகிறேனில்லை.
புன்மையால் - (எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத்தனத்தினால்
உன்னை - உன்னைக் குறித்து
புள்ளுவம் பேசி - வஞ்சகமான சொற்களைச் சொல்லி

விளக்க உரை

“எம்பெருமானே! அடியேன் ‘நாராயணா! நாராயணா” என்று இத்திருநாமத்தையிட்டுக் கூப்பிடுகையாகிற இதொன்னை மாத்திரம் அறிவேனேயொழிய, இத்திருநாமஞ் சொல்லுகை நன்மையாய்த் தலைகட்டுகிறதோ, அன்றித் தீமையாய்த் தலைகட்டுகிறதோ என்பதையும் நான் றிகின்றிலேன்” என்று ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்! என்ன பயனை விரும்பி நீர் இங்ஙனே திருநாமஞ் சொல்லாநின்றீர்? பிரயோஜநாந்தரபாராய் ஏனிப்படி கபடம் பேசுகின்றீர்?” என்று கேட்க, அது கேட்டு ஆழ்வார், “அப்பனே! பிரயோஜனத்தைப் பேணுகையாகிற அற்பத்தனத்தினால் நான் ‘நாராயணா!” என்று சொல்லி உன்னைக் கபடமாகக் புகழுமவனல்லன்காண்” என்ன; அது கேட்டு எம்பெருமான், “நீர் ஒரு பிரயோஜனத்தையும் மெய்யே விரும்பீனரில்லையாகில், மோக்ஷமாகிகற பரமபுருஷார்த்தத்தை விரும்பி, அது பெறுகைக்கு உறுப்பான வழிகளில் முயலப்பாரீர்” என்ன; அது கேட்டு ஆழ்வார், “நாராணனே! மோக்ஷப்ராப்திக்குடலாக நிரந்தர ஸ்மரணாதிகன் வேண்டுமென்று சாஸ்திரங்களிற் சொல்லியபடி அடியேன் அனுட்டிக்கவல்லனல்லன்; ஒரு நொடிப்ö பாழுதும் வாய்மாறாமல் திருவஷ்டாக்ஷாரத்தையே அடியேன் அநுஸந்திக்கவல்வேன்; ஒருக்ஷணம் அதுமாறினாலும் எனக்கு ஸத்தை குலையுமே” என்ற; அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் சொல்வதெல்லாம் சால அழகிதாயிருந்தது; ஒரு க்ஷணம் திருநாமம் சொல்லாதொழியில் ஸத்தை குலையுமென்கிறீர்; ‘என்வாயாற் சொல்லில் உனக்கு அவத்யாவஹமாகும்’ என்றுஞ் சொல்லா நின்றீர்; இதெல்லாம் பெருத்த மிடுக்காயிருந்ததே!” என்ன; அதற்கு ஆழ்வார், “மிடுக்கா? அந்த மிடுக்குக்கு என்ன குறை? உன்னுடைய அபிமாநம் குறைவற்றிருக்கும்படி உள்கோயில் வாசலிலேயே வாழப்பெற்ற வைஷ்ணவன் என்கிற ஆகாசத்தினாலுண்டான மிடுக்குக்குக் குறைவில்லை” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு, நன்மை- ஸ்வரூபாநுரூபம். தீமை- அவத்யாவஹம். புள்ளுவம்- வஞ்சகம். வைட்டணவன்- öவெஷவ? என்ற வடசொல் விகாரம் வன்மை- திண்ணியதான அத்யவஸாய மென்றும் கொள்க.

English Translation

O Tirumal! Right and wrong I do not know, “Narayana” is all I know. I cannot utter false words of praise with deceit in my heart. I do not know how to meditate on you. Repeatedly I call ‘Namo Narayana’. My only strength lies in the fact that I am your devotee residing in your temple, please note.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்