விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாக்குத் தூய்மை இலாமையினாலே*  மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்* 
    நாக்கு நின்னைஅல்லால் அறியாது*  நான் அதஞ்சுவன் என் வசமன்று*
    மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று*  முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்* 
    காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்*  காரணா! கருளக் கொடியானே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாதவா - ச்ரிய: பதியானவனே!
நாரணா - (உலகங்கட்கெல்லாம்) ஆதிநாரணமானவனே!
கருளன் - பெரியதிருவடியை
கொடியானே - த்வஜமாகவுடையவனே!
வாக்கு - (என்னுடைய) வாய்மொழிக்கு

விளக்க உரை

“எம்பெருமான் ஸந்நிதியிற் பொய் சொல்லுகை, க்ஷுத்ர ப்ரயோஜநங்களை விரும்புகை, க்ஷுத்ரர்களைப் புகழ்கை முதலியவையாகிற அசுத்திகள் என்னுடைய வாய்மொழிக்கு அளவற்றிருப்பதனால், அவ்வாய்மொழிகொண்டு உன் பெருமைகளைப் புகழுகைக்கு நான் அர்ஹனல்லதென்று ஒழித்தாலும், நாக்கு ரஸமறிந்ததாகையால், உன்னைத்தவிர்த்து மற்றொருவரை வாயிற்கொள்ள அறியமாட்டாது” என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்ய; அது கேட்டு எம்பெருமான், ‘ஆழ்வீர்! ஆகில் நீரம் அந்த நாக்குடன் கூடிச்சொல்லும்” என்று நியமிக்க! அதற்கு ஆழ்வார், “நாக்கின் தோஷத்தை நினைத்து நான் அஞ்சாநின்றேனே” என்ன; அதற்கு எம்பெருமான், ‘ஆழ்வீர்! நாக்கு ரஸமறிந்ததாகையாலே மேல்விழாநின்றது, அதன் தோஷத்தை அறிந்துள்ள நீர் அது மேல் விழாதபடி அதை உமக்கு வசப்படுத்தி நியமித்துக் கொள்ளும்” என்ன; அதுகேட்டு ஆழ்வார், “அந்த நாக்கு எனக்கு வரப்பட்டிருந்தாவன்றோ அதை நான் நியமிக்கவல்லேன்’ அதுதான் உனக்கு வசப்பட்டு விட்டதே” என்ன; அதற்கு பெருமாள், “ஆழ்வீர்! சால அழகிதாயிருந்தது; ‘உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்’ என்கிறீர், ‘நாக்கு நின்னையல்லாலறியாது’ என்கிறீர், ‘நான் தஞ்சுவன் என் வசமன்று’ என்கிறீர்; இவ்வாக்கியங்கள் ஒன்றோடொன்று சேருவது எங்ஙனே? ஆராய்ந்து பார்த்தால் நீர் பேசும் பேச்சுக்களெல்லாம் மூர்க்கர் பேசும் பேச்சாயிரா நின்றன! என்ன; ஆழ்வார், “அது உண்மையே; என்னுடைய பேச்சுக்கள் மூர்க்கப் பேச்சுகளாகத் தோற்றம்; அதனால் உனக்குச் சீற்றமும் பிறக்கும்; ஆகிலும் அச்சிந்தத்தை ஒருவாறு என்னால் ஸஹிக்க முடியும்; இந்நாக்குப்படுத்துகிற பாடு அப்பப்ப! ஸஹிக்கவே முடியவில்லையே” என்ன; அதற்கு எம்பெருமான், “அந் நாக்கைக்கொண்டு என்னை நீர் புகழத் தொடங்கீனராகில், அது எனக்கு அவத்யாவஹமாய்த் தலைக்கட்டுமே!” என்ன; அதற்கு ஆழ்வார் “எம்பெருமானே” மூர்க்கர் பேசும் பாசுரங்கள் அறிவுடையார்க்குக் குற்றமாகத் தோற்றதவளவேயன்றிக் குணமாகவுந் தோற்றும்; காக்கை ஓரிடத்திலிருந்துகொண்டு தனக்குத் தோன்றினபடி கத்திவிட்டுப்போனாலும், அதனை அறிவுடையார் கேட்டு, ‘இது நமக்கு (உறவினர் வரவாகிற) நன்மையைச் சொல்லாநின்றது’ என்று கொள்ளக் காண்கின்றோம்; அதுபோல அடியேன் நாவினுக்கு ஆற்றமாட்டாமல் வாய் வந்தபடி சிலவற்றைப் பிதற்றினாலும் அவற்றை நீ நற்றமாகவே கொள்ள வேணும்” என்றருளிச் செய்ய; எம்பெருமான், “ஆழ்வீர்! அப்படியாகிலும் குற்றத்தை நற்றமாகக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு என்ன உண்டு?” என்று கேட்க; (காரணா) அது கேட்டு ஆழ்வார், “அப்படியா! நன்று சொன்னாய்; உலகங்களை யெல்லாம் படைத்தவனல்லையோ நீ? ரக்ஷிக்கிறேனென்று கொடிகட்டிக் கிடக்கிறாயில்லையோ நீ?” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு.

English Translation

O Madhava! My language is impure, I dare not sing your praise; alas, my tongue knows nothing else, I fear cannot restrain it. If you become angry over my foolish words, I still cannot shut my mouth. Even a crow’s words are heard as omen. O Lord of birds, O First-cause!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்