விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
    ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
    வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
    தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயவனை - ஆச்சரியசக்தியுடையவனும்
மதுசூதனனை - மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை - பெரியபிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள் - வைதிகர்களின்
ஏத்தும் - துதிக்கப்படுமவனும்

விளக்க உரை

இப்பாடல், இத்திருமொழி கற்பார்க்கப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். மேன்மைக்கு “அமரரேறு” என்பதுபோல, நீர்மைக்கு “ஆயர்களேறு” என்பதாம். நம்பூருவாசாரியர்கள் பெரியபெருமானைக் கிருஷ்ணாவதாரமாக அநுஸந்தித்துப் போருவர்கள்; “ கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங் கவர்ந்தானை, அண்டர்கோ னணியாங்கள் என்னமுதிலே” என்றார் திருப்பாணாழவார். திருபவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் என்றருளிச் செய்வர். - என்று- யசோதைப்பிராட்டி பிள்ளைப்பணியாகச் சாத்தின திருவாபரணம் இப்போதும் பெரியபெருமாள் திருக்கழுத்திற் கிடக்கிறதென்று நேரில் கண்டநுபவித்து அருளிச் செய்தார் பட்டரும். தூயமனத்தனராகி வல்லார்- அநந்யப்ரயோஜநராக ஓதவல்லர்கள் என்றபடி; இதனால், சோறு கூறைகளையே முக்கிய பிரயோஜநமாக நச்சி ஓதுமவர்களை வியாவர்த்திக்கின்ற தென்க.

English Translation

This garland of verses in praise of the wonder-Lord Madhava, Madhu sudana, cowherd-Lord Achyuta, Lord extolled by the Vedas, Lord reclining on a serpent bed, is sung by Vishnuchitta of famed Srivilliputtur, scion of the Veyar clan. Those who master it with purity of heart will become servants of the gem-Lord himself!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்