விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
  இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
  வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
  ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வான் ஏய் - பரமபதத்திற்பொருந்தியிரா நின்ற
வானவர் தங்கள் - நித்ய முக்தர்களுக்கு
ஈசா - தலைவனே!
மதுரை - திருவடத்துரையில்
பிறந்த - அவதரித்த

விளக்க உரை

அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்” என்றும் பாடமுண்டு “நானே துமுன்மாய மொன்றறியேன்” என்றவிடத்தில், (கீழ் இரண்டாம் பாட்டில்) ‘போமிடத்துன் திறத்தெத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை” என்றதை நினைக்க. இந்த ஊன்- விட்ட சரீரததிற்காட்டில் பிரவேசிக்கிற சரீரத்தின் கொடுமையைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த என். நரகத்தில் அதி தீவ்ரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நாசரீரம்” என்று பெயர் அறிக. ஊனே. புகே ஏ இரண்டும் இசைநிறை என்னலாம்.

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! I can scarce fathom any of your mysteries. When Yama’s agents seize and torture me, and force me into a chamber, I will not be able to think of you. O Lord of celestials. O Wonder-child of Mathura, my darling elephant protect me, you must.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்