விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சுருப்பார் குழலி*  யசோதை முன் சொன்ன* 
  திருப் பாதகேசத்தைத்*  தென்புதுவைப் பட்டன்*
  விருப்பால் உரைத்த*  இருபதோடு ஒன்றும் 
  உரைப்பார் போய்*  வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சுரும்பு ஆர் - வண்டுகள் படிந்து நிறைந்த;
குழலி - கூந்தலையுடையளான;
அசோதை - யசோதைப்பிராட்டியால்;
முன் - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே;
சொன்ன - சொல்லப்பட்ட;

விளக்க உரை

உரை:1

வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய குழலை உடைய அசோதைப் பிராட்டியார் கிருஷ்ணாவதார காலத்தில் அண்டை அயலில் உள்ள பெண்களை அழைத்து கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரையில் உள்ள அழகினைக் காட்டியதை தென்புதுவையாம் வில்லிப்புத்தூர் வாழ் பட்டர்பிரான் விரும்பி உரைத்த இந்த இருபத்தியொரு பாசுரங்களையும் உரைப்பவர்கள் வைகுந்தம் சென்று அவன் திருவழகை அனுபவித்து ஒன்றுவார்கள். 

உரை:2

ஸமயத்தில் யசோதைப் பிராட்டியானவள் ஊர்ப்பெண்டுகளை யெல்லாம் அழைத்துக் கண்ணபிரானுடைய பாதாதிகேசாந்த அவயங்களின் ஸௌந்தரியத்தைக் காட்டின பாசுரங்களையே நான் பேசியிருக்கின்றேன்; இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணுவதற்குப் பாங்கான திருநாட்டிலே சென்று இன்புறுவர் - என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று. சுரும்பு+ஆர் = சுருப்பார். பாதகேசம் - வட சொல் தொடர். பாதகேசமென்றது - பாதாதிகேசாந்த வர்ணனை என்றபடி. .

English Translation

These twenty one songs by Pattarbiran of Puduvai fame recall the foot-to-head adoration of Krishna by Yasoda of yore. Those who sing it will go live in Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்