விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
    முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*
    அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
    அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒற்றை விடையனும் - ஒப்பற்ற ரிஷகவாஹநனானன ருத்ரனும்
நான்முகனும் - ப்ரஹ்மாவும்
உன்னை - உன்னை
அறியா - (உள்ளபடி) அறியவொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே - பெருமை பொருந்தியவனே!

விளக்க உரை

சிவபிரான் மற்றவர்களைப்போலன்றி, ப்ரஹ்மராவனை தலையெடுத்த போது, “நுண்ணுணர்வின் நீலார்கண்டத்தமமானும்” என்னும்படி தத்துவத்தை உண்மையாக உணருகைக்கீடான ஸூக்ஷ்மஞான முடையனாதலால், ஒற்றை என்று சிறப்பித்துக் கூறப்பட்டனன். ஒன்று + விடையன், ஒற்றை விடையன்; “ஐயீற்றுடைக் குற்றுகரமுமுளவே” என்பது நன்னூல். இனி, ஒற்றை என்பதை விடைக்கு அடைமொழியாக்கலுமாம். முதலடியில், உன்னை என்றது வார்த்ததைப்பாடு.***- ***- ***- ***- ***- ***- என்று விஷ்ணுவினுடைய ப்ரமமான ஸ்வரூபத்தைப் பிரமனாகிய தானும் சிவனும் மற்றமுள்ள தேவர் முனிவர்களும் அறியார்களென்னுமிடத்தைப் பிரமன்றானே சொல்லிவைத்தான் காண்மின். (முற்றவுலகெல்லாம் நீயேயாகி.) எம்பெருமானுக்குத் தன்னை யொதீந்த ஸமஸ்த வஸ்துக்கம் ப்ரகார பூதங்கள்; எம்பெருமான் அவற்றுக்கு ப்ரகாரி என்றபடி : (மூன்றெத்தாய்). அகார, உகார, மகாரங்களாகிற (ஓம்) பிரணவத்துக்கு அர்த்தமாயிருப்பவன் என்க. “ஓகார என்றது காண்க. இம்மூன்றெழுத்துக்களில் முதலாவதான அகாரத்தின் ப்ரக்ருத்யர்த்தமான ஸர்வகாரணத்வத்தைச் சொல்லுகிறது - முதல்வனே! என்று. ஓ, என்று இரக்கக்குறிப்புமாம் (மூன்றாமடியில்), இவன்+கு, இவற்கு, இடையில் உகரச்சாரியைபெறில், இவனுக்கு என்றாகும். அற்றைக்கு -அப்போதைக்கு.

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! Lord whose glory even Siva and Brahma fail to fathom! O first-Lord of the Universe who became the three worlds and the three syllable Pranava Mantra! When Yama’s agents decide, “This man’s days are over”, and come to grab me rudely, on that day, come to my rescue, you must.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்