விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
    நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 
    போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
    ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன் திறத்து - உன் விஷயத்தில்
எத்தனையும் - சிறிதாயினும்
புகா வண்ணம் - அவகாஹிக்காமாட்டாதபடி
நமன் தாமர்கள் - யமபடர்கள்
நா மடித்து - (மிக்ககோபத்தோடு) நாக்கை மடித்துக்கொண்டு
 

 

விளக்க உரை

“ஆமிடத்தே - சாமிடத்தென்னைக் குறிக்கொள் கண்டாய் (என்று) உன்னைச் சொல்லிவைத்தேன்” என்று இயையும். கீழ்ப்பாட்டில் “எல்லாஞ் சோர்விடத்து” என்றதை விவரிக்கிறது - “சாமியிடத்து” என்று. எம்பெருமானே! எனது உயிர் உடலைவிட்டு நீங்கினபிறகு, யமகிங்கரர் வந்து மிக்க சீற்றங்கொண்டு நாக்கைமடித்துப் பலவகைத் துன்பங்களைச் செய்வதற்காக யமலோகத்திற்கு இழுத்துக்கொண்டு போகும்போது, என் நெஞ்சினால் உன்னை நினைக்கமுடியாதபடி உன்னை உன் நெஞ்சுக்கு விஷயமாக்காமல் மறைத்துக் கொள்ளும்படியான மாயச்செயல்களில் நீ வல்லவனாதல்பற்றி அக்காலத்தில் உன்னை நினைக்கை அரிதென்று, இந்திரியங்கள் ஸ்வாதீகமாயிருக்கப் பெற்ற இப்போதே, “சரமஸமயத்தில் அடியேன் நலிவுபடாவண்ணம் திருவுள்ளம்பற்றி யருளவேணும்” என்று உன் திருவடிகளில் விண்ணப்பஞ் செய்து கொண்டேன் என்கிறார். அநேகதண்டம் - வடசொல் தொடர். செய்வதா - செய்வதாக. நிற்பர் - முற்றெச்சம்; நின்று என்றபடி; செய்வதாநின்று- செய்வதாக மனத்திற்கொண்டு என்பது தேர்ந்தபொருள். அன்றி, நிற்பர் என்பதை வினைமுற்றாகக் கொள்ளுதலும் ஒன்று.

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed, bearer of conch and discus! Remember me you must, when I die. For when Yama’s agents twist their tongues and beat me in many ways, I will give no taught of you, --that is your game. Here and now I make this prayer to you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்