விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
  ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
  எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
  அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வந்து நலியும் போது - கிட்டி வருந்துங்காலமாகிற
அங்கு - அந்த சரமதசையில்
நான் - அடியேன்
உன்னை - தேவரீரை
ஏதும் - க்ஷணகாலமாயினும்
 

விளக்க உரை

“துப்புடையாயை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவை யென்றே” என்று முன்னிலையாகக் கூறவேண்டியிருக்க; அங்ஙனங் கூறாது படர்க்கையாகக் கூறியது, இடவழுவமைதியின் பாய்படும்: முன்னிலைப் படர்க்கை என்க; “ஓரிடம்பிற இடந்தழுவலுமுளவே” என்பது நன்னூல். காத்தல்தொழிலில் வல்லமை எம்பெருமானுக்கன்றி மற்ற ஆர்க்கேனும் அமையாதென்பது - ப்ரபந்ந்பரித்ராணம் முதலிய பிரபந்தங்களிளால் அறுதியடப் பட்டதாதலின், படர்க்கைப்பொருள் பொருந்தாதென்றுணர்க. “உடையாரை: துணையாவர்” என்ற பன்மை - பூஜையிற் போந்ததாம். ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, “திருமாலே! ரக்ஷணத்தில் ஸமர்ப்பனான உன்னை அடியேன் ஆசரயிப்பது, ‘செவி வாய் கண் மூக்கு முதலியவையெல்லாம் தளர்ச்சிபெற்று ஒரு காரியத்திற்கும் உதவப் பெறாதகாலத்தில் நீ துணையாவாய்’ என்ற நிச்சயத்தினாலன்றோ” என்றருளிச்செய்ய அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர்! என்ற எனது பிரதிஜ்ஞைக்க விஷயபூதர்களான அதிகாரிகளுக்குநீர் ஒப்போ?” என்று கேட்க; ஆழ்வார், “அப்படிப்பட்ட அதிகாரிகளோடு எனக்கு ஒப்பு இல்லையாயினும், உனது நிர்ஹேதகக்ருபையையே கணிசித்து என்னுடைய துக்கம் பொறுக்கமாட்டாமல் உன்னை அடைந்தேன்” என்ன; இப்படிநான் ஆரை ரக்ஷித்ததுகண்டு என்னைநீர் அடைந்தது? ” என்று எம்பெருமான் கேட்க “ஆர்த்தியும் அநந்யகதித்வமு மொழிய வேறொரு யோக்யதையில்லாத ஸ்ரீகஜேனக்திரானாழ்வானுக்கு நீ அருள்புரிந்து பிரஸித்தமன்றோ” என்று ஆழ்வார் அருளிச்செய்ய, அதுகேட்ட எம்பெருமான், “ஆனால் அந்த ஸ்ரீகஜேந்திராழ்வானைப்போல் நீர் உமக்குத் தளர்த்தி வந்தபோது நினைத்தீராகில் அப்போது வந்து ரக்ஷிக்கிறோம்” என்ன; ஆழ்வாரும் அது கேட்டு, “வாதம், பித்தம், கிலேக்ஷ்மம் என்ற மூன்று தோஷங்களும் ப்ரபலப்பட்டு வருத்துவதனாலுண்டாகும் இளைப்பானது என்னை நலியுங்காலத்தில் உன்னை நான் நினைப்பது எப்படி கூடும்?” என்று கேட்க; ஆழ்வார், “சரமகாலத்துக்காக இப்போதே சொல்லி வைக்க முடியும்; அதைத்தான் சொல்லிவைத்தேன்” என்ன; “இப்படி நீர் சொல்லிவைத்தால் இதை நான் நினைத்திருந்து உம்மை ரக்ஷிக்கவேண்டிய நிர்ப்பந்தமென்ன?” என்று எம்பெருமான் கேட்க அதற்கு ஆழ்வார், “அப்படியா? ஸ்ரீவைகுண்டத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் கோயிலில்வந்து பள்ளி கொண்டருளினது இதற்காகவன்றோ” என்பதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம்.

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! Highly-placed ones are cultivated so as to avail of their help in times of need. I am unworthy, yet I beseech you because you did save the elephant Gajendra in distress. When death throws its snares over me, I will not be able to remember you in any way. This here is my prayer, made to you in advance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்