விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
    தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 
    மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
    எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கை நாகத்து இடர் கடிந்த - பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின
கனல் ஆழி - ஜ்வலியா நின்றுள்ள திருவாழியாழ்வனை
படை உடையான் - ஆயுதமாகவுடைய எம்பெருமான்
கருதும் கோயில் - விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய்
தென் நாடும் வட நாடும் தொழ நின்ற - தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும் ஸேவிக்கும்படி அமைந்த

விளக்க உரை

இத்திருமொழிகற்பார் நலமந்த மில்லாதோர் நாடுபுக்கு அடியார்கள் குழாங்களை யுடன் கூடி வாழப்பெறுபவர் என்று பலங்கூறியவாறு. மெய்ந்நாவன்- “பொய்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்” என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது போல; இத்தால் இவரருளிச் செய்யும் பகவத்வைபவம், திருப்பதி வைபவம் முதலியவற்றில் இறையும் பொய்கலசாமை போதருமென்க. மெய்யடியான் அடிமை செய்துவிட்டு ‘தேஹி’ என்று மடியேற்குமவரல்ல ரென்கை. கை+ நாகம்; கைந்நாகம். மெய்+நாவன். மெய்நாவன் தாம் எ. அசைச்சொற்கள்

English Translation

This decad by truthful devotee Vishnuchitta sings of the pilgrimage centre of Tiru-Arangam, worshipped by the north and the south, where the discus-wielding-Lord, saviour-of-the-distressed-elephant resides. Those who master it will forever be inseparably united to the lotus feet of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்