விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
    ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 
    இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
    திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செரு ஆளும் - தானே போர்ச்செய்யவல்ல
புன் ஆனன் - பெரிய திருவடிக்குத் தலைவனும்,
மண் ஆனன் - லீலாவிபூதியை ஆளுமவனும்,
செரு செய்யும் - (ஆச்ரித விரோதிக்கு எதிர்த்துப்) பூசல் செய்யவில்லை.
நாந்தகம் என்னும் - நந்தகம் என்கிற

விளக்க உரை

அஸுரராக்ஷணரோடு போர்புரியுமிடத்து, அந்த யுத்தத்தை பெரியதிருவடிதானே நடந்த, எம்பெருமான் அதைக் கண்டுகொண்டு அவன் தோடரிலே இருக்குமத்தனையைப்பற்றச் செருவாளும்புள் என்றார்; “பாறிப்பாறியரை தம் பல்குழாய்கள் நீறெழுப்பாய் பறவை யென்றேறி வீற்றிருந்தாய்” என்றார் நம்மாழ்வாரும், நித்யஸூர்களின் தலைவனான பெரிய திருவடியை வாஹாரமாக வுடையவன் என்றதனால் நித்யாவிபூதிநாயகத்வம் சொல்லப்பட்டதாய், மேல்வீலா விபூதிநாயகத்லஞ் சொல்லப்படுகிறது- மண்ணாளன் என்று. காந்தகம்- நீட்டல் விகாரம். ஆயுதத்தினால் அழிக்கவொண்ணாத பாஹ்யருக் ருஷ்டிமதங்களை அழிப்பதற்குப் பரிகாரமான வேதங்களை ஆளுமவன் என்கிறது- மறையாளன் என்று. எனவே, விரோதிநிரஸகம் பண்ணுவது- சஸ்திரத்தாலும் சாஸ்த்ரத்தாலும் யவன் என்றலுமொன்று; என்றாரிறே எம்பெருமானார். விழுக்கையாளன் என்ற ஆழ்வார் யருளிச்செயலின்படி- தன்னையும் தனது பரிகாரங்களையு மடங்கலும் அடியார்தமக்கே ஆக்கிவைக்ருஞ் சீர்மையுடைமைதொல்லுகிறது; விழுமம்- சீர்மை ஞானத்தின் ஸங்கோசவிநாஸங்களுக்குக் காரணமாகிய இரவு பகல்களைத் தன் அதிகமாகவுடையவன் என்கிறது- இராவணன் பகலாளன் என்று.

English Translation

The husband of Sri is the rider of the fierce Garuda, the master of the Earth, the wielder of the sharp dagger Nandaka, the substance of the Vedas, the commander of the army, the generous, the Lord of night and day, my master and sovereign of the seven worlds. Tiru-Arangam is the temple where he reclines.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்