விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
    மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 
    சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
    பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவு உடைய - தேஜஸ்ஸையுடைய
மீனம் ஆய் - மத்ஸ்யமாயும்
ஆமை ஆய் - கூர்மமாயும்
எனம் ஆய் - வராஹமாயும்
அரி ஆய் - நரஸிம்ஹமாயும்

விளக்க உரை

எம் பெருமானது தசாவதாரங்களை அடைவே கூறுவன முன்னடிகள். “தேவுடைய” என்ற அடைமொழி- ஆமை முதலிய எல்லாவற்றிலும் அந்வயிக்கக்கூடாது. (மூவருவினிராமனாய்) துஷ்டக்ஷத்ரியரை ஒழிப்பதற்கான பரசுராமவதாரமும் ராவணாதிராக்ஷஸரை ஒழிப்பதற்கான ஸ்ரீராமாவதாரமும், ஆஸுரப்ரக்ருதிகளான க்ஷத்ரியாதிகளை ஒழிப்பதற்கான பலராமாவதாரமுமாகிய இம்மூன்று அவதாரங்களுள் நடுச்சொன்ன ஸ்ரீராமாவதாரம் ஸ்வரூபேண அவதரித்ததாகையால் முக்கியம்; மற்றவை இரண்டு ஆவேசாவதாரங்களாகையால் அமுக்கியம். ஆயினும் அவ்விரண்டிற்கும் ஸ்வரூபாவேசரூபதயா.... உயர்த்தி உள்ளாகையால் அவை முக்கிய அவதாரங்களுடன் சேர்த்து கணக்கிடப்பட்டன. இவற்றில் பரசுராமாவதாரம் அஹங்காரயுக்தனான அதிஷ்டாநாம்ம் பண்ணி நிற்பதனால் முமுக்ஷுக்களுக்கு அது உபாஸிக்கத்தக்கதன்று; பலராமாவதாரம் அஹங்கார லேசமுற்றதாயும் எம்பெருமானுக்கு மிகவும் அபிமத விஷயமாயு மிருப்பதனால் அது முக்கிய அவதாரங்களாடொக்க உபதாதோயம். இனி, உபாஸிக்கத்தகாத பரசுராமாவதாரத்தை ஆழ்வார் அருளிச்செய்வானென்? எனில்; தசாவதாரங்களையும் அருளிச்செய்வதாகத் திருவுள்ளத்திற் கொண்டபடியாலும், அவ்வ்வதாரத்திற் பண்ணின விரோதிஸம்ஹாரம் தமக்கு அபிமதமாகையாலும் அருளிச்செய்தாரென்க “மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட இராமநம்பி” என்பர் மேலும்.

English Translation

Males and females of swan pairs sit on lotus flowers, swing and sway, crush and roll on a bed of flowers and smear pollen like Sin door powder on each other in the waters of Tiru-Arangam. It is the temple of the Lord who came in the Avatars of the fish, the tortoise, the boar, the lion, the manikin, the three Ramas, Krishna and finally who will come as Kalki too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்