விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
  சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*
  உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட* 
  வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முடி - (அவனது தலையிலுள்ள) கிரீடமானது
இடிய - பொடி படும்படியாகவும்
கண் - கண்களானவை
பிதுங்க - பிதுங்கும்படியாகவும்
வாய் அரை - (வேதனை பொறுக்கமாட்டாமல்) வாய் விரியும்படியாக

விளக்க உரை

தேவர்களிடத்துப் பெற்ற வரங்களின் வலிவையும் தனது தோள் வலியையும் பெருக்க நினைத்து ‘நமக்கு ஒருவராலும் ஓரழிவு நேரமாட்டாது’ என்று துணிந்து தனக்கு வரமளித்த தேவர்களோடு மற்றுள்ளாரோடு வாசியற அனைவரையும் நெருக்கித் தன்கீழாக்கித் ‘தன்னுடைய நாமொழிய எம்பெருமானது திருமநாமம் காட்டில் நடைபெறவொண்ணாது’ என விளங்கி, பசுவந்நாமம் சொன்னதுவே காரணமாகப் பள்ளியிலோதிவந்த தன் சிறுவனான ப்ரஹலாதனைப் பலவகைகளால் நலிந்த இரணியன் ஒருநாள் ‘பிள்ளாய்! நீ சொல்லுகிறவன் எங்கு உளன்?’ என்று தன் மகனைநோக்கிக் கேட்க, அவன் ‘எங்குமுளன்’ என்று விடைகூற, அது கேட்ட இரணியன் ‘இத்தூணிலே உளனோ?’ என்று சொல்லித் தானளந்து கட்டி வைத்ததொரு துணைப் புடைக்க, எம்பெருமான் தனது அடியவனுடைய சொல்லை மெய்ப்பிக்கைக்காக அத்தூணில் நரசிங்கவுருவாய் புறப்பட்டுத் தனது திருஉகிர்களையே ஆயுதமாகக்கொண்டு அவனுடைய மார்பை மறுபாடூருவும்படி ஊன்றித் தலையிற்கிரீடம் பொடிபடும் அடியாகவும், கண்கள் பிதுங்கும்படியாகவும், வேதனைகள் பொறாமல் வாய் விரியும்படியாகவும் தலையைப் பிடித்து நெரித்தமையைக் கூறுவன, முன்னடிகள். ஒள்ளிய மார்பு- இரணியன் தனது மார்வை ஆபரணம் முதலியனவற்றால் அலங்கரித்தும் பலகாலும் அழகு பார்த்துக்கொண்டிருந்தவனால், ***- என்கிறார். சிரம் - ...... பிதுங்குதல்- உள்ளடங்காமற் புறப்படுதல். “***- அலறு” என்றும் பாடமுண்டு. தெழித்தல் என்று கோபங் கொள்ளுதற் பேராதல் அறிக நான்காமடிக்கும் உள்ளுறை பொருள்- தேவர் முதலானார் திரண்டு வந்து காலைநீட்டி தலைவணங்கித் தண்டனிட்டுக் கிடக்குமாற்றைக் கூறியனாறாம்.

English Translation

Fertile lotus flowers rise like the Lord’s feet that measured the Earth; ripe paddy growing tall, kneel to them and bow their golden heads like Mabali, in cool Tiru-Arangam. It is the temple of the Lord who tore into Hiranya’s bright chest with sharp claws. How the Asura’s crown rolled, his eyes popped out and his mouth screamed as the Lord seized him by the head!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்