விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
    நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 
    சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
    பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆமை ஆய் - (முதலில் கங்காஜலத்துக்குள்) ஆமையாயும்
கங்கை ஆய் - (பின்பு அந்த ஆமைமுதலிய ஜந்துக்களுக்கு இருப்பிடமான) கங்கையாயும்
ஆழ் கடல் ஆய் - (பின்பு அக்கங்கை முதலிய நதிகளுக்குப் புகலிடமான) ஆழ்ந்து கடலாயும்
அவனி ஆய் - (பின்பு அக்கடலுக்கு இருப்பிடமான) பூமியாயும்
அவனி அய் - (பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும்

விளக்க உரை

துரியோதநாதியருடைய யாகத்தில் வந்த அரசர்களைவரும் ஸ்ரீத்வாரகையின் மஹிமையையும் , அங்கு ஸ்ரீகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிற மதிப்பையுமெல்லாம் துரியோதநாதிகளின் முகமாகக் கேட்டுத் தாங்கள் கண்ணபிரானோடு உறவு பண்ணிக்கொள்ள விரும்பி, அத்துரியோதநாதியருடனும் பாண்டவர்களுடனும் ஸபரிலாராய்ப் புறப்பட்டு ரைலதகபர்வதத்திற்குப் போந்து, தாங்கள க்ருஷ்ணஸேவார்த்தமாக வந்திருக்கிறபடியைக் கண்ணபிரானுக்குத் தெரிவிக்க, அதையறிந்த கண்ணனும், ‘இவர்கள் பரிவாரங்களுடன் திரண்டு வருகைக்கக் காரணம் யாதோ’ என்று சிந்தித்து, ஸ்ரீபலராமனையும் ஸாத்யகியையும் முன்னிட்டுக்கொண்டு சேனைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர்களிருப்பிடத்திற் கெழுந்தருளிய எல்லாரையும் குசலங்கேட்டு, அவரவர்களுடைய வயஸ்ஸுக்கும் வலிவுக்கும் அறிவுக்கும் பெருமைக்கும் தக்கவாறு ஆஸநமிடுவித்துத் தானும் தனக்கேற்றதொரு சீரியசிங்காசனத்தில் எழுந்தருளியிருளியிராநிற்கச்செய்தே, ஸ்ரீநாரத மஹர்ஷி வந்து வணங்கி ஸ்ரீகிருஷ்ண பகவானை நோக்கி “ஸர்வ தேவதர்களிற் காட்டிலும் நீர் ஆச்சரியகாரும் தந்ய (***- )ன் - க்ருதார்த்தன்). ருமாகாநின்றீர் ; இங்ஙனிருப்பார் இவ்வுலகில் வேறு யாருமில்லை” என்று விண்ணப்பஞ்செய்ய, கண்ணபிரான் அதைக்கேட்டுப் புன்முறுவல் செய்து, “முனிவனே! தக்ஷிணைகளோடுகூட நான் ஆச்சரியனாகவும் ***- னாகவும் சொல்லப்பட்டவன்” என்றருளிச்செய்ய, அதனைக்கேட்ட முனிவன் மிகவும் மணமகிழ்ந்து. “பிரானே! தேவர் அருளிச்செய்த வாக்கியத்தினால் அடியேன் மிகவும் மகிழ்வுற்றேன்; இனி வந்தவழியே விடைகொள்ளுகிறேன்” என்று விண்ணப்பஞ்செய்து போக நினைத்தவளவில், அங்குள்ள அரசர்கள் பொருளைத் தாங்கள் அறியாமையாலே ஸ்ரீகிருஷ்ணனுடைய திருமுகமண்டலத்தை நோக்கி நாரதமுனிவன் தேவரைக்குறித்துச் சொன்ன வாக்கியமும், அதற்கு உத்தரமாகத் தேவர் அருளிச்செய்த வாக்கியமுமாகிற இந்த மஹாரஹஸ்ய எங்களுக்க இன்னதென்ற விளங்கவில்லை, இதனை விரித்துரைக்க வேணும்’ என்று பிரார்த்திக்க, கண்ணபிரானும் அம்முனிவன்றன்னையே கூறுமாறு நியமித்தருள, அம்முனிவன் அவ்வரசர்களை நோக்கி இவ்வண்ணம் கூறத்தொடங்கினான்;-

English Translation

When the sage Narada, taking a holy dip in the Ganga, worshipped a tortoise as wonderful and praiseworthy, the tortoise pointed to the river as being greater than itself. The river pointed to the ocean, the ocean to the Earth, the Earth to the mountain, the mountain to the four-faced Brahma, Brahma to the four Vedas, to the fire-Yajnas, and the Yajnas to the Lord, worshipped with offerings-made-with-love Dakshina. He lies reclining in the temple of Tiru-Arangam, where swans throng the lotus-filled waters and praise the bird-king Garuda in cooing tones.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்