விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
  அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 
  புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
  பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன்னு - நித்தியவாஸம் பண்ணுகிற
கோயில் - கோயிலாவது;
புதுநாள் கமலம் மலர் - அப்போதலர்ந்த செவ்விய தாமரை பூவானது
எம்பெருமான் - எம்பெருமானுடைய
பொன் வயிற்றில் - அழகிய திருநாபியிலுள்ள

விளக்க உரை

முன்னடிகளிற் குறித்த வரலாறு - கீழ்* கதிரரயிரமிரவியின் ஆறாம்பாட்டினுரையில் குறிப்பப்பட்டுள்ளமை காண்க. இத்தேவிமார் பதினாறாயிரத்தொருநூற்றுவர் என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்திற் காணப்படுகிறது. திரவரங்கமா நகரைச்சுற்றிச் சூழ்ந்துள்ள திருக்காவேரியில் எம்பெருமானது திருநாபிக் கமலம் போன்ற பல தாமரை மலர்கள் ஓங்கி விளங்குகின்றனவென்றும், அப்பூக்களோடடொத்த அழகிய பூக்கள் மற்றோரிடத்திலுமில்லை யென்றுங் கூறுவன பின்னடிகள். வயிறு- திருநாபிக்கு இலக்கணை. “பூவே” என்றவிடத்து, ஏ - இசைநிறை. போல்வான் -வான் விகுதிபெற்ற வினையெச்சம் பொதுநாயகம் பாவித்து - லோகஸ்ருஷ்டிக்குக் காரணமாய் ஸர்வநிர்வாஹகமாயிருக்கிற இருப்பைத்தானு முடையதாகப் பாவித்து என்றபடி இறுமாந்து = இறுமா-பகுதி; இறுமாப்பு-கர்வம்.

English Translation

The charming bridegroom of Dvaraka surrounded by sixteen thousand queens in attendance is their Lord and husband. He resides in Tiru-Arangam where the graceful day-fresh lotus blossom which pales the others in the waters, seems to pride over its uniqueness matching the flower on the Lord’s golden navel

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்