விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
    செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*
    திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
    உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருத்தி - குறையறச்செய்து முடித்துவிட்டு
வந்து - (பிராட்டியுடன் அயோத்திக்கு) எழுந்தருளி
உலகு ஆண்ட - ராஜ்யபரிபாலநம் செய்தருளின
திருமால் - ச்சரியபதி (எழுந்தருளியிருக்கிற)
கோயில் - கோயிலாவது;

விளக்க உரை

“ஓசலிக்கும்” என்ற விடத்து, ஓ- உயர்வு சிறப்பு; அசையுமாம் “காட்டிநின்று” என்ற பாடத்தில் செய்யுளோசை குன்றுதலாலும், வியாக்கியாக விரோத முண்டாகையாலும் “காட்டிநின்ற” என்றபாடங் கொள்ளப்பட்டது; “ப்ரகாசிப்பியாநின்ற அழகையுடைத்தான நீலமலரானது” (தாள் கோசி பாடம்) என்ற ஜீயருரைவாக்கிய மறியத்தக்கது. இராமபிரான், தன்னை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு சித்திரகூடத்திற் பணிந்து வேண்டியன பரதாழ்வானை நோக்கி, ‘தந்தை சொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வனவாசங்கழித்தன்றி யான் அரசாள மீளமாட்டேன்’ என்றருளிச்செய்ய, பரதன் ‘இனி நாம் நிர்ப்பந்திக்கலாகாது’ என்றிசைந்து, “அடியேனுடைய பாரதந்திரியமே விளங்ககைக்கும், தேவர் மீண்டெழுந்தருளிவீர்; என்று நம்புவதற்கும் அடி ஏன்?” என்று கேட்க, அவ்விரண்டிற்கு முறுப்பாகப் பாதுகைகளை அளித்தரளின படியைக் கூறுவது, முதலடி. ..... மயமான திருவடி; பாதுகை. பணயம்- அடகு; உலகத்தில் ஒருவர் ஒரு பொருளை மற்றொருவிடத்து அடகுவைப்பது; நம்பிக்கைகாகவாம்; அதுபோல இராமபிரானும் பரதனுடைய நம்பிக்கைக்காக அவனிடத்து இம்மாவடியை வைத்தருளினமையால் “பயணம் வைத்து” என்றார். வான் என்று பெருமையைச் சொன்னபடி; ‘பணயம்’ என்பதன் பொருளின் ஏகதேசமாதகிய நம்பிக்கையில் அப்பெருமைக்கு அந்நயம்; இதனால், உறுதியின் ஏகதேசமாகிய நம்பிக்கையில் அப்பெருமைக்கு அக்வயம்; இதனால், உறுதியான நம்பிக்கையைக் கூறியவாறு. பணையம் எனினும், பணயம் எனினும் ஒக்கும். ராவணாதி ராக்ஷஸலெல்லாரும் கூடிக்கொண்டிருப்பது தென்திசையிலாகலாம், அதனைச் சேருவுடையதிசை என்றார். இத்திசைக்கருமந்திருத்துகையாவது- ஜகஸ்நாதசுவாஸிகளான அரக்கரை அழித்ததும், ஸுக்ரீவனுக்குப் பகையறுத்து அரசாட்சி செய்வித்ததும், *இலஙகை பாழானாகப் படைபொருந்தும் விபீடணனுக்கு அரசித்ததும் முதலியன.

English Translation

The shapely blue lily sways in the breeze, reflecting the dark hue of the Lord Ranganatha, and the dark eyes of the lady Ranganayaki in bright Tiru-Arangam, the temple of Tirumal. He is the Lord who left his sandals with his younger brother Bharata as warranty, went Southwards performing mighty deeds and gave succor to the gods, then returned to rule the world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்