விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
  பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 
  தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
  தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொழுப்பு உடைய - கொழுப்பையுடையதும்
செழு - செழுமை தங்கியதுமான
குருதி - ரத்தமானது
கொழித்து - ஊற்றுமாறாமல் கிளர்ந்து
இழிந்து - நிலத்தில் பரவி

விளக்க உரை

ஊட்டுப் பன்றிபோல நிணங்கொழுக்கும்படி போஷகவஸ்துக்களை உட்கொண்டு உடலை வளரச் செய்து திரிகையாலே கொழுப்புடைத்தாயும் அழகியதாயுமிருக்கிற ரத்தமானது ஊற்று மாறாமல் கிளர்ந்து அருவி குதித்ததுபோலே நிலத்திலே யிழிந்து குமிழிகிளம்பி அலையெறியும்படியாக உலகங்களையெல்லாம் கலிந்துதிரியும் பிழைகளையுடையரான அசுரர்களை நிரந்வய விநாசமாக்கிவிட்டவாறு கூறுவன முன்னடிகள். (தழுப்பரிய இதயாதி.) மலையினிடத்து வளர்ந்துள்ள பெருப்பெருத்த கந்தகவிருஷங்களை வேரோடு கிளப்பி இழுத்துக்கொண்டு இவற்றைக் கைக் கொண்டருள வேணும் என்று இருப்பதுபோல இவரகண்டநின்ற காவேரியானது தான் கொணர்ந்த சாத்துப்பாடியைப் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்துத் திருவடிகளைத் தொழ நிற்கும்படியாக கூறியவாறு. தழும்பரிய- சந்தன மரம் சிறிதாயிந்தால் ஓருவரிருவரால் தழுவமுடியும். அளவிட்டுக்காடட் கெவாண்ணாதபடி மிகவும் ஸ்தூலமாக யிருப்பதனால் தழுவ முடியாமை கூறப்பட்டது. தழுவுகள்- கைகளால் அணைத்துக் கொள்ளுதல்

English Translation

Two-winged beetles at dusk sing the Lord’s praise and blow the white Jasmine conch in the walled city of Tiru-Arangam. It is the abode of our master who came once as a boar with strong tusks and again as a lion with white feline teeth, then lifted the wide Earth and Hiranya Kasipu with equal ease

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்