விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
    உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 
    குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
    திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குரவு - குரவ மரங்களானவை
அரும்ப - அரும்புவிடா நிற்க
கோங்கு - கோங்கு மரங்களானவை
அலரா - அலரா நிற்க.
குயில் - குளில்களானவை

விளக்க உரை

பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராதென்று துணிந்து, நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவு மொண்ணாத பற்பல பிழைகளைச் செய்து உலகத்தையெல்லாம் படவடித்துக்கிடந்து கூப்பிடும்படி பண்ணித் திரிந்த இராவணனைக்கொன்று உலகத்தையெல்லாம் வாழ்வித்தருளின எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்- நித்யவஸந்தமான சோலைகளையுடைய திருவரங்கமென்பதாம். வரம்- தற்சமவடசொல். பிழக்கு- பிழை.

English Translation

Cool groves where Kurava trees sprout buds, Kongu trees spill flowers and cuckoos call all day surround. Tiru-Arangam, the abode of my Lord Tirumal, the guardian of the world. He destroyed the demon king Ravana who performed evil acts with the boons he had received.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்