விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அங்கயல்பாய்  வயல் தென் அரங்கன்,*  அணி ஆகமன்னும்- 
  பங்கய மாமலர்*  பாவையைப் போற்றுதும்   பத்தியெல்லாம்- 
  தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே!  நம் தலைமிசையே *
  பொங்கிய கீர்த்தி *  இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - ஓ மனமே!;
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து - பக்தியெல்லாம் நம்மிடத்திலே குடிகொண்ட தென்று சொல்லும்படியாக வீறுபெற்று;,
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ - பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்;
நம் தலைமிசையே மன்ன - நமது தலைமேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக;
அணி ஆகம் மன்னும் - அழகிய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறவளாய்;
 

விளக்க உரை

இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளைப் பொருந்திவாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஹித்திக்கும்படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்கவல்ல பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப்போமென்கிறார்-முடிவான இப்பாட்டில். ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்கவல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவுள் என்றதாயிற்று.

English Translation

I saw in my eyes the dark gem-hued Lord, resplendent with the war-waging discus and conch. He came as a manikin then and strode the Earth with great feet, O. How he grew and became worshipped by the seven worlds!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்