விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து*  எங்கள் குழாம்புகுந்து*
    கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி*  வந்துஒல்லைக் கூடுமினோ*
    நாடும் நகரமும் நன்கறிய*  நமோ நாராய ணாயவென்று*
    பாடு மனமுடைப் பத்தருள்ளீர்*  வ‌ந்து பல்லாண்டு கூறுமினே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்து - (கைவல்யத்தில் ஆசையை விட்டு) வந்து;
எங்கள் குழாம் புகுந்து - (அநந்யப்ரயோஜநரான) எங்களுடைய
கோஷ்டியிலே அந்வயித்து ;
கூடும் மனம் உடையீர்கள் - ஒன்றாய்ச் சேர்ந்துவிட வேணுமென்கிற விருப்பமுடையவர்களாயிருந்தால்;
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் - பொல்லாத ஸ்தானமாகிய கைவல்யத்திலே உங்களைக கொண்டு தள்ளுவதற்குமுன்னே;

விளக்க உரை

இங்கே ஏடு நிலம் என்ற சொல்லுக்கு பொல்லாத ஸ்தானம் என்பது பதப்பொருள் என்று பெரியோர் கூறுவார். இந்த பாசுரத்திலே கைவல்யார்த்திகளை, அனன்யப்பிரயோஜனர்களான தன்னுடைய கோஷ்டியிலே சேருவதற்காக அழைக்கப்படுகிறார்கள். கைவல்ய அனுபவத்திலே இருப்பவர்களே, சூக்ஷ்ம சரீரமானது தனக்குக் காரணமான மூலப் பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னமே, ஆத்மானுபவம் மட்டுமே பண்ணுவோம் என்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கும் வரம்பை ஒழித்து, நீங்கள் எங்களோடு சேர்ந்து விட வேணும். அப்படிச் சேர்ந்த பின்பு நீங்கள் எங்களோடு சேர்ந்து விட்டீர்கள் என்பதை நாடும் நகரும் நன்கு அறிய திருமந்திரத்தைச் சொல்லி – (பாடு மனமுடைய பத்தர் கோஷ்டி) பாடவேணும் என்ற எண்ணத்தை உடைய பக்தர்களுக்குள் சேர்ந்தவர்களாய் இருந்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுங்கள் என்று அழைக்கிறார் ஸ்ரீ பெரியாழ்வார்.

English Translation

Before you place your trust on infirm ground, come! Join us! O, Like-hearted man, give up your temporal aims and join us quickly! Let town and country resound with the chant ‘Namo Narayanaya’. Ye Devotees, who wish to sing, come! Join us in singing Pallandu.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்