விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்‍- 
  பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து‍-
  இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து*  இன்று அவன்வந்து-  
  இருப்பிடம்*  என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாயனாக்கு - ஸர்வேச்வரனாக்கு;
இருப்பு இடம் - வாஸஸ்தானம் (எவை யென்றால்);
வைகுந்தம் - பரமபதமும்;
வேங்கடம் - திருவேங்கடமலையும்;
என்பர் கல்லோர் - என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்; 

விளக்க உரை

கீழ்ப்பாட்டிற் கூறியபடியே அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார் ‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம்விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பியருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

English Translation

The good ones say that Vaikunta, Venkatam, and Malirumsolai hills are the celebrated abodes of the wonder-lord. Along with these, the lord has also come to reside in Ramanuja's heart. He, in turn, has come to reside sweetly in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்