விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு*  உனதடிப் போதில் ஒண்சீ- 
  ராம் தெளி தேன் உண்டு*  அமர்ந்திட வேண்டி,*  நின் பாலதுவே- 
  ஈந்திட வேண்டும் இராமாநுச! இது அன்றியொன்றும்*  
  மாந்த கில்லாது,*  இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நின் பால் - தேவரீரிடந்தில்;
போந்தது - வந்து சேர்ந்தது;
அதுவே - அத்திருக்குணங்களையே;
ஈந்திட வேண்டும் - அளித்தருள வேணும்;
இது அன்றி - இத்திருக்குணங்களைத் தவிர;

விளக்க உரை

ஸ்வாமிந்! அடியேனுடைய நெஞ்சு தேவரீருடைய திருக்குணங்களையே எப்போதும் அநுபவிக்க விருப்பங்கொண்டு மேல்விழுந்து தேவரீரிடம் வந்து சேர்ந்தது. இது இனி வேறொன்றை விரும்பாது; தேவரீரும் இனி இதை ஸம்ஸாரத்தில் போகவொடட்டாமல் தேவரீனிடத்திலேயே நிலைநிறுத்திக் கொள்ளவேணும். என்றாராயிற்று. தமது நெஞ்சை ஒரு வண்டாக ரூபணம் பண்ணினதற்கு ஏற்ப எம்பெருமானாருடைய திவ்ய புணங்களை மதுவாக ரூபணம் பண்ணினார். இந்த வண்டுக்கு அந்தந் தேன் தவிர வெறொன்றும் ரஸிக்க மாட்டாது. மயக்கிடல் = முனினிலை யெதிரமறை வினைமுற்று. மயக்காதே என்றபடி

English Translation

O Ramanuja! My heart is a golden bee hovering around you desirous of drinking the sweet nectar of your glory –flood flowing from the lotus of your feet. The bee cannot drink anything else. Pray give it what it wants. Do not show something else and trick it away from you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்