விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

     வடதிசை மதுரை சாளக்கிராமம்*  வைகுந்தம் துவரை அயோத்தி* 
    இடமுடை வதரி இடவகையுடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*
    தடவரை அதிரத் தரணி விண்டிடியத்*  தலைப்பற்றிக் கரைமரம்சாடி* 
    கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தட வரை - (மந்தரம் முதலிய) பெரிய மலைகளானரவை
அதிர - சலிக்கம்படியாகவும்
காணி - பூமியானது
விண்டு இடிய - பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
அயோத்தி - திருலயோத்யையும்

விளக்க உரை

பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது வந்திழிகிற வேகத்தைச் சொல்லுவன பின்னடிகள். கடுத்து=கடுமை-வேகம்.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which flows so violently that the mountains rumble, the earth splits and crumbles, the trees along the course get sunk and uprooted, and the ocean turns. It is the abode of our Lord Purushottama who also owns the Northern resorts of Mathura, Saligrama, Vaikunta, Dvaraka, Ayodhya and Badari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்