விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,*  இந்தப் பூதலத்தே- 
  மெய்யைப் புரக்கும்*  இராமாநுசன் நிற்க,*  வேறுநம்மை-
  உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாதென்று உலர்ந்து அவமே* 
  ஐயப்படா நிற்பர்*  வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொய்யை சுரக்கும் பொருளை துரந்து - பொய்யான விஷயத்தையே மேன்மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின) அர்த்தங்களைக் கண்டித்து;
இந்த பூதலத்தே - இப்பூமியிலே;
மெய்யை புரக்கும் - ஸத்யத்தை ரக்ஷிக்கிற;
இராமாநுசன் - எம்பெருமானார்;
நிற்க - எழுந்தருளி யிருக்கும் போது;

விளக்க உரை

பொய்யைச் சுரக்கும் பொழுளென்றது -பொய் தவிர வேறில்லாத அர்த்தம் என்றபடி “ஸர்வம்அஸத்யம்” என்கிறாவர்களாகையாலே அஸத்யமயம். மெய்யைப் புரக்கு மிராமாநுசன் = “யதார்த்தம் ஸர்வவிஜ்ஞாநம்” என்று ஸ்தாபித்தருளினவர். புரத்தல்- காப்பாற்றுதல்.

English Translation

When Ramnuja stands in this world as the guardian of truth and destroyer of false doctrinal interpretations, alas, people of the world go searching for another god and wither away, lose their minds, and spend their lives in doubt.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்