விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து,*  எண்ணில் பல்குணத்த- 
  உன்னையும் பார்க்கில்*  அருள் செய்வதே நலம்*  அன்றி என்பால்-
  பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை* 
  தன்னை என் பார்ப்பர்?*  இராமாநுச! உன்னைச் சார்ந்தவரே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில் - எண்ணிறந்த பல திருக்குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில்
அருள் செய்வதே நலம் - (இப்போது போது எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி - இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என்பால் நலம் உளதே - என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)
உன்னை சார்ந்தவர் - தேவரீரை ஆச்ரயித்தவர்கள்

விளக்க உரை

எம்பெருமானாரே! மிகுந்த பாவங்களுடன், உலக விஷயங்களில் ஈடுபட்டபடி உள்ள என்னை நீவிர் பார்க்க வேண்டும். இவ்விதம் உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபட்டபடி உள்ள என்னுடைய குணங்களை நீவிர் காண வேண்டும். எண்ண இயலாத உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்டுள்ள உம்மையே நீவிர் ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியாக ஒப்பு நோக்கிய பார்வை மூலம், பரமகாருணிகரான நீவிர், எல்லையற்ற பாவங்கள் நிறைந்த என்னை வாரி எடுத்து, உமது கருணைக்கு இலக்காக்க வேண்டும். இவ்விதம் நீவிர் செய்யாமல், என்னைக் காப்பாற்ற என்னிடம் வேறு ஏதேனும் நன்மை உள்ளதா என்று நீவிர் ஆராய்ந்து பார்த்தால், உமது திருவடிகளை அண்டியுள்ளவர்கள், உம்முடைய உயர்ந்த குணங்களைக் குறித்து ஐயம் கொள்ள மாட்டார்களா?

English Translation

O Ramanuja! Seeing me and my nature, and seeing your infinite virtues, you grace upon me is the only good. Beyond that, if you still see any merit in me, what will your devotees say of your boundless grace?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்