விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு* 
    மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*
    அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட* 
    கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தலைப்பெய்து - திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி - கர்ஜனைபண்ணி
சலசல பொழிந்திட - சள சள வென்று மழை பொழிய
கண்டு - (அதைக்) கண்டு
மலை - கோவர்த்தன மலையாகிற

விளக்க உரை

முன்னடிகளில் கூறிய கோவர்த்தநோத்தரண வரலாறு கீழ்ப்பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டது. சலசல - ஒலிக்குறிப்பு. மறைத்தவன் என்றும் பாடமுண்டென்பர். பின்னடிகளின் கருத்து; - தபஸ்விகளான மஹர்ஷிகள் பகவத்ஸமாராதந ரூபங்களான யாகங்களைக் குறையற அனுட்டித்து, அத்திமதிநத்தில் அவப்ருத ஸ்தாகஞ்செய்ய, அநந்தரம் பெருக்காறாப்பெருக்கி யாகபூமிலுள்ள கலப்பை முதலிய உபகரணங்கள ளெல்லாவற்றையும் எடுத்துத்தள்ளிக்கொண்டு போகாநிற்குமதான கங்கைக்கரையிலுள்ள கண்டமென்னும் நடிகர் என்பதாம். அவபிரதம்- வேள்வியின் முடிவிற் செய்யவேண்டிய ஸ்நாகம்;

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga in whose powerful surge; great sages take their ritual bath after a fire-sacrifice and bring back driftwood for making sacrificial ladles. It is the abode of our dear Purushottama, Lord of Mathura, who held a mountain as an umbrella against the laden clouds when they poured incessantly with thunder.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்