விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால்,*  நிரயத்து- 
    அழுந்தியிட்டேனை*  வந்து ஆட்கொண்ட பின்னும்,*  அரு முனிவர்-
    தொழும் தவத்தோன் எம் இராமாநுசன்*  தொல் புகழ்* சுடர்மிக்கு- 
    எழுந்தது,*  அத்தால் நல்ல அதிசயங் கண்ட இருநிலமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தவத்தோன் - ப்ரபத்தியாகிற தபஸ்ஸையுடையவராயுமிருக்கிற;
எம் இராமாநுசன் - ஸ்வாமி எம்பெருமானாருடைய;
தொல் புகழ் - நித்யமான கல்யாண குணங்கள்;
அத்தால் - அதைக்கண்டு;
இரு நிலம் - விசாலமான இப்பூமண்டலம்;

விளக்க உரை

 ஸ்ரீமத் பகவத் கீதையில் – ஸ மஹாத்மா ஸு துர்லப – இப்படிப்பட்ட ஞானி கிட்டுவது மிகவும் அபூர்வம் – என்றான். அதன் பின்னர் ஸ்வாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தபோது, “இவரை நாம் காணமுடியாமல் போனதே”, என்று வாஸுதேவனே வருத்தம் கொண்டதாக ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட உயர்ந்த நிலையை “அரு” என்னும் பதம் கூறியது. அடுத்துள்ள “முனிவர்” என்னும் பதம் ஸ்வாமி நம்மாழ்வாரைக் கூறியது. “வாஸுதேவஸ் ஸர்வம்”, “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”, என்று அனைத்தும் கண்ணனே என வாழ்ந்தவர் ஸ்வாமி நம்மாழ்வார் ஆவார். இப்படிப்பட்ட நம்மாழ்வாரால், “பொலிக பொலிக” என்று போற்றப்பட்டவரும், “ஆ முதல்வன்” என்று ஆளவந்தாரால் போற்றப்பட்டவரும் எம்பெருமானார் ஆவார். இப்படிப்பட்ட உயர்ந்தவர்கள் போற்றும்படியாக, ப்ரபத்தி என்னும் தவம் கொண்டவராக உள்ளவர் உடையவர் ஆவார். இந்த உலகில் எங்கும் பரவியுள்ளதும், எந்தவகையான ப்ராயச்சித்தம் கொண்டும் தொலைக்க முடியாததும் ஆகிய வினைப்பயன்களால் நான் ஸம்ஸாரம் என்னும் கடலில் சிக்கித் தரை காண இயலாமல் இருந்தேன். இப்படிப்பட்ட என் போன்றவர்களை, எங்கள் அறியாமை கண்டு கைவிடாமல், நாங்கள் உள்ள இடம் தேடி வந்து ஆட்கொண்டதால், எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்கள் மேலும் ஓங்கி வளர்ந்தன. இவ்விதம் என் போன்ற பாவம் செய்த பலரைக் காப்பாற்றிய பின்னர், எம்பெருமானாரின் குணங்கள் மேலும் ஓங்கியதைக் கண்ட இந்த உலகம் வியந்து நின்றது. என் போன்ற வினை உள்ளவர்கள் இன்னமும் இந்த உலகில் அதிகம் பேர் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் ஓங்கி வளர்ந்தது எனலாம்.

English Translation

I was caught in the evergrowing Ivy thicket of Sin, Ramanuja came and took mastery over me. But even after that, the sage worshipped by Yogis shone with the effulgence of lasting fame. This world has seen a miracle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்