விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும்,*  திருவாய் மொழியின்- 
  மணந்தரும்*  இன்னிசை மன்னும் இடந்தொறும்*  மாமலராள்- 
  புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்* 
  குணந்திகழ் கொண்டல்*  இராமாநுசன் எம் குலக்கொழுந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குணம் திகழ் - ஆத்ம குணங்களால் விளங்குபவரும்;
கொண்டல் - (ஔதார்யத்தில்) காளமேகத்தை ஒத்த வரும்;
எம் குலம் கொழுந்து - எங்கள் குலத்துக்குத் தலைவருமான;
இராமாநுசன் - எம்பெருமானார்;
புக்கு நிற்கும் - எழுந்தருளியிருப்பார்;

விளக்க உரை

இங்கு உணர்வு என்பது பக்தியைக் குறிக்கும். பக்தி என்பது ஸ்ரீமந் நாராயணனே அனைத்திற்கும் எஜமானன் என்று அறிந்து, அவன் அனைத்து திருக்கல்யாண குணங்களும் கொண்டவன் என்று உணர்ந்து, அவன் ஆனந்தமயமாக உள்ளவன் என்று தெளிந்து அவனைப் போற்றும் தன்மையாகும். இப்படிப்பட்ட தன்மையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆழ்வார்கள் ஆவர். ஆக – உணர்ந்த மெய்ஜ்ஞானியர் – என்பது ஆழ்வார்களைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஆழ்வார்கள் கூட்டத்தில் எப்போதும் உள்ளவர்; ஆழ்வார்களில் ப்ரதானமாக உள்ள நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியானது, தனது இசை என்னும் நறுமணத்தை எங்கெல்லாம் பரப்பியபடி உள்ளதோ, அங்கெல்லாம் உள்ளவர்; தாமரை மலரில் அமர்ந்த மஹாலக்ஷ்மி மிகவும் விரும்பி ஆரத்தழுவுகின்ற திருமார்பைக் கொண்டவனாகிய ஸ்ரீமந் நாராயணன் மிகவும் உகந்து எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களில் பொதிந்து நிற்பவர் – இவற்றுள் தானாகவே கானகத்தில் வந்து வழிகாட்டி சேர்த்துவிட்ட காஞ்சீபுரம், பெரியபெருமாளின் ஆணையின் பேரில் வந்து அருளிய திருவரங்கம், சைவர்களின் பிடியில் இருந்து காப்பாற்றிய திருமலை, வேதங்களை ஏற்காத மதங்களை வாதம் செய்து வீழ்த்திய திருநாராயணபுரம், நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரி, ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றிய திருமாலிருஞ்சோலை – ஆகியவை முக்கியமானவை – இப்படியாக பல இடங்களிலும் மிகவும் ப்ரியம் கொண்டு ஈடுபட்டு எம்பெருமானார் காணப்படுவார். இவ்விதம் பக்தி என்ற குணமே இவரிடம் சென்று மேலும் மேன்மை பெற்றது என்னும்படியாக உள்ள எம்பெருமானார், எங்களது வைணவ குலம் தழைக்க வந்த கொழுந்து ஆவார். வேருக்கு அதிக வெப்பம் ஏற்பட்டால் அதனை உணர்ந்த கொழுந்துப்பகுதி வாடுவது போன்று, எங்கள் வைணவ குலத்திற்கு ஏதேனும் நேர்ந்தால், தனது முகம் வாடும் தன்மை கொண்டவர் என்று கருத்து.

English Translation

Where bands of godly-realised souls gather, wherever the Tiruvaimoli's fragrant music is sung, wherever the lord with the lotus dame Lakshmi on his chest resides, -there our benevolent cloud Ramanuja our clan's master, enters and stays.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்