விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேதையர் வேதப் பொருள் இதென்று உன்னி*  பிரமம் நன்றென்று 
  ஓதி மற்றெல்லா உயிரும் அஃதென்று*  உயிர்கள் மெய்விட்டு-
  ஆதிப் பரனோடு ஒன்றுமென்று சொல்லும் அவ் வல்லலெல்லாம்* 
  வாதில் வென்றான்,*  எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேதையார் - (வேதத்தைப் பிரமானமாகக் கொள்ளாத) அவிவேகிகள்;
இது வேதப் பொருள் என்ற உன்னி - நாங்கள் சொல்லுகிற இதுதான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு;
பிரமம் நன்று என்று ஒதி - ப்ரப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’  என்று சொல்லி;
மற்று எல்லா உயிரும் அஃது என்று - அந்தப் ப்ரஹ்மந்தவிர மற்ற எல்லா ஜீவராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி;
உயிர்கள் மெய்விட்டு - ‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு;

விளக்க உரை

வேதங்களைப் ப்ரமாணம் என்று ஒப்புக்கொளாத மதம் அன்றி, வேதங்களே ப்ரமாணம் என்று ஏற்றுக்கொள்ளும் தன்மையில் உள்ளபோதும் – யாதவப்ரகாசர் முதலானோர் வேதங்களுக்குத் தவறான பொருள்களைக் கூறியபடி உள்ளனர். இவர்கள் தாங்கள் கூறுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று வாதாடியபடி உள்ளனர். ப்ரஹ்மம் மட்டுமே உண்மை என்று கூறி, மற்ற அனைத்து ஆத்மாக்களும் ப்ரஹ்மமே என்று வாதாடுகின்றனர். அனைத்து ஆத்மாக்களும் ப்ரஹ்மமும் ஒன்றே என்பது போன்ற தவறான கருத்துக்களைப் பரப்பியபடியும் வந்தனர். இப்படிப்பட்ட இவர்களின் ஆரவாரம் நிறைந்த வாதங்கள் அனைத்தையும், இந்த உலகைக் காப்பாற்றும் விதமாக, தனது வாதம் மூலம் எம்பெருமானார் வென்றார். இவ்விதமாக இவர்களை வென்ற நமது எம்பெருமானார், உண்மையான ஞானம் நிரம்பிய கடலாகவே உள்ளார்.

English Translation

Concluding that self-knowledge is the purport of the Vedas, puerile ones consider Brahman as the truth and identify if with consciousness, thereby excluding the insentient world. They further supreme that the soul become one with supreme after the body is shed, Out Ramanuja won over all these absurdities with his gift of logic and deep thought.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்