விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கோக்குல மன்னரை மூவெழு கால்*  ஒரு கூர் மழுவால்-
  போக்கிய தேவனைப்*  போற்றும் புனிதன்*  புவனமெங்கும்-
  ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின்*  என்
  வாக்கு உரையாது,*  என் மனம் நினையாது இனி மற்றறொன்றையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கோக்குலம் மன்னரை - க்ஷத்திரிய குலத்து அரசர்களை;
மூ எழு கால் - இருபத்தொரு தலைமுறையளவும்;
ஒரு கூர் மழுவால் - கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே;
போக்கிய - (பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின;
தேவனை - எம்பெருமானை;

விளக்க உரை

முன்பு ஒரு காலகட்டத்தில், மிகுந்த செல்வம் உள்ளதால் அரசன் என்று இல்லாமல், இயல்பிலேயே க்ஷத்ரியர்களாக உள்ளதால் அரசர்கள் என்று கூறிக் கொள்பவர்களை இருபத்து ஒரு தலைமுறை, தனது கோடாரி கொண்டு வதைத்த பரசுராமனை எம்பெருமானார் போற்றி நின்றார். இப்படிப்பட்ட தூய்மையான எம்பெருமானாரின் புகழ் இந்த உலகம் முழுவதும் பரவி நிற்கிறது. இத்தகைய எம்பெருமானாரை அண்டிய பின்னர், இனி வரும் காலங்களில், எனது மனம் வேறு எதனையும் நாடாது; எனது வாக்கு அவரது புகழ் அல்லாமல் எதனையும் கூறாது

English Translation

Our sacred teacher Ramanuja, revered the world over, worshipped the feet of the lord who wielded his battleaxe the feet of the lord who wielded his battleaxe and destroyed twenty one mighty kings. Having attained him, my heart does not think of anyone else. My lips do not speak of anyone else.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்