விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அற்புதன் செம்மை இராமானுசன்,*  என்னை ஆளவந்த- 
  கற்பகம்*  கற்றவர்*  காமுறு சீலன்*  கருதுஅரிய-
  பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதுஎன்னும்* 
  நற்பொருள் தன்னை,*  இந் நானிலத்தே வந்து நாட்டினனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என்னை ஆள வந்த - என்னை ஆட்கொள்வதற்காக அவதரித்த
கற்பகம் - உதாரரும்;
கற்றவர் காமூது சீலன் - ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தையுடையவரும்;
அற்புதன் - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையரும்;
செம்மை - ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான;

விளக்க உரை

ஸ்ரீமந் நாராயணனின், “இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கரையேற்றப்பட வேண்டும்”, என்ற ஆணையை ஏற்று, இந்த உலகிற்கு எம்பெருமானார் வந்தார். என்றாலும் இந்த உலகில் உள்ள அனைவரிலும் மிகவும் தாழ்ந்தவனாக உள்ளை என்னை அடிமை கொள்ளவே வந்தார். நான் உள்ள இடம் தேடி வந்த கற்பக மரம் போன்று இவர் உள்ளார். அனைத்து உயர்ந்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல கற்பகம் போன்று உள்ளார். அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவர், பெரியவன் – சிறியவன் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல், அனைவருக்கும் சமமாக உள்ள தன்மை கொண்டவர் ஆவார். இப்படிப்பட்ட எம்பெருமானார் உபதேசித்தது என்னவென்றால் – உபதேசம் செய்வதற்கு மிகவும் கடினமான கருத்தாக உள்ள, “அனைத்து ஆத்மாக்கள், ஆத்மாக்கள் உள்ள அனைத்து லோகங்கள் ஆகிய அனைத்தும் – அனைவரிலும் மிகவும் உயர்ந்தவனாக உள்ள ஸ்ரீமந் நாராயணனுக்கே அடிமை”, என்று நிரூபித்தார். இத்தகைய உயர்ந்த கருத்தை இந்த உலகம் முழுவதிலும் வெளிப்படுத்த, இந்த உலகம் பிழைக்கும்படி, தானே வந்து அவதரித்தார். ஒரு சிலருக்கு, ஒரு சில காலம் மட்டுமே உபதேசம் செய்தார் என்று இல்லாமல், இந்த உலகினருக்கு எப்போதும் உள்ளபடி ஸ்ரீபாஷ்யம் போன்றவற்றை நிலைநிறுத்தினார்.

English Translation

The wonderful glorious Ramanajua, whom the learned ones desire, is my kalpaka wishing tree, come to rule me. He established the difficult concept that all the world is the lord's corpus and all the souls are the lord's soul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்