விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை* 
    நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*
    இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
    கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இமவந்தம் தொடங்கி - இமயமலையின் உச்சிமுதற்கொண்டு
இருகடல் அளவும் - பெரியகடல் வரைக்கும்
இரு கரை - இரண்டு கரைகளிலுமுள்ள
இரைத்து - ஆரவாரித்துக்கொண்டு
ஆட - நீராட

விளக்க உரை

அரசுரர்களு மரக்கர்களும் இந்திரன் முதலிய தேவர்களைக் குடியிருக்கவோட்டாதபடி அனைத்து அடர்ந்து எதிர்த்து போர்புரியப்புக, அப்போது எம்பெருõமன் இந்திராதிகளுக்குப் பக்ஷபாதிபதியாயிருந்து அவர்களை இடையூறின்றி அரசான்விக்குமாறு அவ்வசுரர்மீது தனது கந்தகவாளைவீசியெறிந்து அவர்களைப் பொழிந்தமை முன்னடிகளிற்கூறியது. இறுமாந்திருக்கையாவது கண்டவாற்றால் தனதேயுலகென நின்றாறன்னை என்றாற்போல வீற்றிருக்கை. அரசான் நாந்தகம்விசிறு என இயையும். ஏற்றுவந்து என்று வந்து அஹங்கரித்து வந்து, நாந்தகம் நீட்டல் விகாரம், நகர்தான் - தான் அசை. இமவந்தக தொடங்கியிருங்கடலளவும் என்பது வடசொல்வழக்கு. ஹிமகத்பர்வத்த்தின் உச்சிதொடங்கி பெரியகடலளவும் இகண்டுவரையிலுள்ள லோகத்தாருந் திரண்டு ஆரவாரித்துக்கொண்டு வந்து நீராட, அவர்களுடைய பரபங்களையெல்லாம் பொறுத்து அவர்களைத் தூயரக்கும் பெருமையைவுடையது கங்கையென்க கமை என்ற வடசொல்திரியு, “கமை பெருமை உடை“ எனமாற்றி இயைத்து, (பாவங்களை) க்ஷமிக்கையாகிற பெருமையையுடைய என்றுரைப்பாருமுளர்.

English Translation

The good city of Khandam stands on the banks of the Ganga which secures forgiveness for past Karmas, and attacks pilgrims from everywhere for a holy dip on both its banks right from the Himalayas down to the sea. It is the abode of our Purushottama who wields his Nandaki dagger over the army of Asuras who oppose the just rule of the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்