விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேறுஒன்று மற்றில்லை நின்சரண் அன்றி*  அப் பேற‌ளித்தற்கு- 
    ஆறுஒன்றும் இல்லை*  மற்ற‌ச் சரண் அன்றி,*  என்று இப்பொருளைத்-
    தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்* 
    கூறும் பரம‌ன்று*  இராமானுச மெய்ம்மை கூறிடிலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின் சரண் அன்றி - தேவரீருடைய திருவடிகளைத்தவிர;
மற்று பேறு ஒன்றும் இல்லை - உபேயம் வேறொன்று மில்லை;
அப்பேறு அளித்தற்கு - தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு
அச்சரண் அன்றி - அத்திருவடிகள் தவிர;
மற்று ஆறு ஒன்றும் இல்லை - வேறு உபாயம் ஒன்று மில்லை;

விளக்க உரை

உடையவரே! உமது திருவடிகளைத் தவிர்த்து நாங்கள் பெறும் புருஷார்த்தம் வேறு ஏதும் இல்லை. இத்தகைய உயர்ந்த பேற்றினை உமது திருவடிகள் தவிர வேறு ஏதும் அளிக்காது. இவற்றைப் பெறும் உபாயம் வேறு ஏதும் இல்லை. எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு உணர்ந்த நமக்கு – பரமபதமும் உயர்ந்த இடம் அன்று, பகவத் ப்ராப்தியும் உயர்ந்த உபாயம் அன்று, பக்தியோகமும் உயர்ந்தது அன்று. இப்படிப்பட்ட உமது திருவடிகளின் உன்னதமான தன்மையை அறிந்தவர்கள்; இதனை அறியாமல் உள்ள நான் – ஆகிய இரு பிரிவினருக்கும் உமது செம்மையான திருக்கல்யாண குனங்களை, எந்தவிதமான வேறுபாடும் பாராமல் அருளினீர்! ஒரு பொருள் கொடுத்தால், அதற்குப் பதில் ஒரு துணி கொடுப்பது போல் அல்லாமல், எங்களிடம் இருந்து எதனையும் எதிர்பாராமல், உம்மையே அல்லவா நீவிர் எங்களுக்குக் கொடுத்துவிட்டீர்! இப்படிப்பட்ட உமது திருக்கல்யாண குணத்தை உண்மையாகவே, உள்ளது உள்ளபடி கூற வேண்டுமானால், அது அரிய செயலாகவே அமையும்.

English Translation

Ramanuja! There is no greater purpose than attaining your feet, and there is no way to attain it save the grace of your feet alone. Those who understood this have received your grace in such great measure as you have given to me today. How much, is beyond my words!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்